10
சூளாமணி
ம், கனவுகள் கண்டதும் அவற்றிற்கேற்பப் பின்னிகழ்வன சம்பவித்தமையும் விரித்துக் கூறியுள்ள விவரம் இங்கே கவனிக்கத்தக்கது. நம்மவர்க்குக் கனவிலுள்ள நம்பிக்கை மிகவும் அதிகமென்பது இதனால் வெளியாகும். இராமாயணத்தில் திரிசடைகண்ட கனவும் அதன் பயனை விளக்கியதும் மேற்கூறியதனை வலியுறுத்தப்போதிய சான்றாம்.
பெரும்பாலும் சமண நூல்கள் துறவினையும் முத்தியையும் இறுதியிற்கூறி முடிக்கும் வழக்கம்போல, இந் நூலுள்ளும் பயாபதி அரசன் தன் புதல்வரைப் பூமியாளவைத்து மனைவியருடன் துறந்து தவஞ்செய்து முத்திபெற்ற வரலாறு மிகவிரிவாய்க் கூறப்பட்டுள்ளது; மேலும் இதன்கண் சுவர்க்க நரகங்களைப் பற்றியும் அவற்றுட் புகுவோர் அனுபவிக்கும் இன்பதுன்பங்களைப் பற்றியும் அதிக விநோதமாய் வருணிக்கப்பட்டுள்ளன.
இந்நூலின் கதாநாயகனாகிய திவிட்டன் ஜைனஸ்வாமிகளாகிய இருபத்துநான்கு தீர்த்தங்கரருட் பதி னோராவரான சிரேயஸ்வாமிகள் காலத்தினனென்று சூளாமணிக்காவியப் பாயிரங்கூறும். ஸ்ரீபுராணத்திலும் "அதே, ஸ்ரீயஸ்ஸ்வாமி தீர்த்தஸந்தாநகாலத்து ப்ரஸித்த விஜயத்ரி ப்ருஷ்ட அச்வக்ரீவ நாமப்ரதம ராமகேசவ ப்ரதிவாஸுதேவ சரிதம் ஆக்யாயதே" என்று ஆரம்பித்திருப்பது நோக்கத்தக்கது. ஜைனசமயத்தார் தீர்த்தங்கரர்களை அருகக்கடவுளென்றே கருதிக்கொண்டாடுவார்கள். தீர்த்தங்கரர்கள் உபதேசமில்லாமலே உண்மை ஞானம்பெற்று அசோகமரத்தின்கீழ் முக்-