உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளாமணி (வசனம்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

11

குடைநீழலில் சமவசரணமென்னும் ஜிநக்ருஹத்திலிருந்து ஞானோபதேசம் செய்வர். அவர்பால் உபதேசம் பெற்றவர்கள் தமது கருமங்களையொழித்து வீட்டினை யடைவர். அக்கோயில் பூமிக்கு ஐயாயிரம் வில்லுயரத்திற்குமேலே பன்னிரண்டு யோசனையுள்ளதாய்த் தேவரால் நிருமிக்கப்பட்டது. இவ்விவரங்கள் பலவும் சைன நுல்களுட் கண்டவை.

சூளாமணிக்காவியம் சொற்பொலிவு, பொருணயம், நடையழகு கற்பனையலங்காரம் கதைமுடிவு முதலியவற்றாற் சீவகசிந்தாமணியை யொக்கும். இக்காவியத்தின் சிறப்பினை நோக்கிக் குணசாகரர் முதலிய உரையாசிரியர்கள் இந்நூலின் செய்யுட்களைப் பெரும்பாலும் உதாரணமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

தமிழணங்கணியும் சிகாரத்தினம்போல விளங்கும் இக்காப்பியத்தைச் சுமார் முப்பது வருடங்கட்குமுன் கற்றவர்கண்டு களிகூர அச்சிட்டு வெளிப்படுத்திய மகான் காலஞ்சென்ற ஸ்ரீ சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள். பிள்ளையவர்கள் செந்தமிழ்நூல்களை யாய் வதே தமது பொழுதுபோக்காகக் கொண்டதுமன்றிப் பல அரிய தமிழிலக்கண இலக்கிய நூல்களை அச்சுவாகனமேற்றித் தமிழுலகில் நின்றுநிலாவி யுலாவச் செய்துள்ளார். அன்னோர் தமிழிற்குச்செய்த பேருதவியினை யாவரு நன்கறிவர். மேலும் இவர், சூளாமணிக் காவியத்தைக் கற்கப்புகும் மாணவர் அதனை எளிதிலுணரவும் ஏனையோரும் அக்காவியக் கதையினைப் படித்து மனமகிழவும் கருதி, அந்நுற் சரித்திரத்தினை வசன நூலாகவும் செய்துள்ளார். அவ்வசன நூல் முதனூற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளாமணி_(வசனம்).pdf/15&oldid=1957889" இலிருந்து மீள்விக்கப்பட்டது