12
சூளாமணி
செய்யுணடையையே பெரும்பாலுந் தழுவியதாய்த் திரி சொற்பிரயோகம் மிகுதியும் பெற்றுச் செந்தமிழ் பயில அவாவினை யுடையார்க்கேயன்றி ஏனையோர்க்குக் கடினமான நடையுடையதா யிருத்தலின், அக்கதையினை எளிய நடையிலெழுகினாற் பலர்க்கும் பயன்படக் கூடுமெனக் கருதி இவ்வசனநூல் எழுதபெற்றுள்ளது. இவ் வசனமும் முதனூலாகிய காவியத்தின் கதைப்போக்கையும் சொற்போக்கையுமே தழுவியுள்ளது; எனினும் தமிழின் பாஷை நடை மேலுமேலுஞ் சிறப்பினையடையக் கருதவேண்டுவது ஒவ்வொருவர்க்கும் கடமையா மாதலின், இதன் கண்ணும் சிற்சில கடினமான சொற்களும் சொற்றொடர்களும் காணப்படும். அவற்றையு மெளிதிலுணர அரும்பதவுரை அகராதியொன்று இந்நூலினிறுதியிற் சேர்க்கப்பட்டுள்ளது.
வசனநூல் பல வேண்டுமென்று பெரிதும் விரும்பும் இக்காலத்தில் இந்நூல் வேண்டாததொன்றாகாது என்று கருதியே வரையலாயிற்று. இதன்கண் முக்குணவயத்தான் முறைபிறழ்ந் தெழுதிய பிழைகள் பல வுளவெனில், குற்றம் நீக்கிக் குணத்தை மேற்கொள்ளும் பெரியார் பலரையும், அவற்றிற்காக எம்மைப் பொறுத்தருள் புரிய வேண்டுகின்றனம்.
| கடலூர், | ந. ப. | ||||
| 16-9-1918. | |||||