இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௳
சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
சூளாமணி
அத்தியாயம் 1
திருவளர்ந்தோங்கிய பரத கண்டத்தில் சுரமை என்னும் பெயர்கொண்ட புராதன நாடொன்றுண்டு. மேகங்கள் நாற்புறமும் தவழும் அழகிய கோடிக்குன்றமென்னு மலையைப் பெயர்த்தெடுத்தேந்திய திவிட்ட குமாரன் விருப்புடன் அரசு வீற்றிருந்தது அந்நாடென்ப. எல்லாச் செல்வத்திற்கும் இருப்பிட மென்னலாம்படி அந்நாடு நானிலவளங்களும் ஒருங்கே அமையப்பெற்றதாம். மலைகளிலெல்லாம், ஒருபுறம் அருவிகளின் ஆரவாரத்தோடு யானைக் கூட்டங்களின் பிளிற்றொலியும் குறவர்கள் முருகவேட்கு வெறிபாட்டயரும் விழவொலியும் மலித்திருக்கும்; மேகங்கள் இடிக்கும் பொழுதெல்லாம் நீலமணிபதித்த ஆலவட்டம்போன்ற தமது கலாபங்களை விரித்து மயிற் கூட் டங்கள் ஒருபுறம் ஆடிக்கொண்டிகுக்கும்; மற்றொரு பால், வேங்கை, காந்தள், நீலம் முதலிய மலர்களின் நறு-