உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளாமணி (வசனம்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

சூளாமணி

மணங்கமழாநிற்க, அவற்றினின்றும் ஒழுகிய தேன் பெருக்கெடுத்து அருவிபோல் ஓடும்; இன்னு மோர் பால், சந்தன மரங்களின் நீழலில் களிற்றினங்கள் தமது மதத்தை யுண்ணவரும் வண்டினங்களைப் பிடிகள் காந்தட் குலைகளால் ஓட்டாநிற்பப் பெருமகிழ்ச்சியோடும் உறங்கும். காடுகளெங்கும் இடையர்களின் புள்ளாங்குழலொலி பன்னிறப் பறவைகளின் ஒலியினும் மிக்கொலிக்கும்; கொன்றை, குருந்து, முல்லை முதலிய மலர்களின் வாசனை வண்டினங்கள் வந்து தேனை யாசிக்கும்படி எங்கும் பரவி நிற்கும். மருத நிலங்கடோறும் நாட்டிய மகளிரின் மத்தள வொலியும் சங்கினங்களி னோசையும் மங்கல வாத்தியங்களின் கீதநாதமும், வயலில் உழவர்களின் ஆரவாரமும் மிகுந்திருக்கும்; தடாகங்களில் தாமரை ஆம்பல் முதலிய மலர்கள் அழகாய் மலர்ந்துதிகழும்; ஒருபுறம் கருநிற எருமைகள் குவளைகண்மலர்ந்த பொய்கைகளில் விழுந்து உழக்கும் கண் கவர் வனப்பினை யுடையதாகும். கடற்கரை நிலங்களெங்கும், செம்படவர்களின் மீன் பிடிக்கும் ஓதையும் பரதமகளிரின் மீனுணக்கும் ஆரவாரமும் கடற் சிறுவர்களின் நீர் விளையாட்டின் ஒலியும் கடன் முழக்கினும் பதின்மடங்கு மிக்கொலிக்கும்; புன்னை, தாழை, நெய்தலாதிய மலர்களின் மணம் கடலின் புலவு நாற்றத்தையு நீக்கும். நீர்வள நிலவள முதலிய வளங்கள் பலவும் பொருந்திய இந்நாட்டினைத் திருமகளின் நடனசாலையாகக் கூறுவது மிகவும் பொருத்தமானதே.

நன்னீர்த் தடாகத்தின் நடுவே மலர்ந்த தாமரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளாமணி_(வசனம்).pdf/18&oldid=1957904" இலிருந்து மீள்விக்கப்பட்டது