உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளாமணி (வசனம்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூளாமணி

3

மலர்போல ரமணீயமான இந்நாட்டிற்குப் பேரணிகலனாய் எல்லாச் சிறப்புக்களையு முடையதாய் பற்பலவித மதிலுறுப்புக்களையும் கோட்டை கொத்தளங்களையும் பெற்று இந்திரபுரியாகிய அமராவதியையும் அழகினால் வென்று விளங்குவது அதன் தலை நகராகிய போதனமா நகரம். இந்நகரின் மாடமாளிகை கூடகோபுரங்களின் பேரழகும் கடைவீதிகளின் விநோதக்காட்சியும் அந்தணர் அரசர் வணிகர் சூத்திரர் என்னும் நால்வகை வருணத்தார்களின் இருக்கைகளின் ஒழுங்கும் இவற்றினிடையே திவ்ய தேசோமயமாய் விளங்கும் தேவ கோட்டத்தின் எழிலும் வித்தியாதர வுலகம் இதுதானோ என்று யாவரும் மயங்கும்படிச் செய்யும், உலகிலுள்ள செல்வங்கள் யாவற்றையு மொருங்கே யோரிடத்திற் பார்க்க விரும்பினால் அந்நகரிலே அவற்றை யெளிதிற் காணலாம். இந்நகரின் மாட்சியைத் தோலா மொழியையுடைய பெரும் புலவர்களாலும் வருணிக்கமுடி யாது; ஆயிரநாவுடைய ஆதிசேடனும் அதன் பெருமையை யெடுத்துக்கூற ஆற்றலிலனாவான். இந்த நகரம் பொன் மணி முதலியவற்றின் பிரகாசத்தால் இரவும் பகலும் வித்தியாசம் காணப்படாது இமையவருலகே இறங்கிவந்து இம்மண்ணிடைத் தங்கியது போல விளங்கும்.

இந்நகரத்தில், மனுநெறி தவறாது மன்னுபிரைத் தன்னுபிர் போலப் பாதுகாக்கும் பயாபதி என்னும் பெயருடைய அரசனொருவன் அரசுபுரிந்து வந்தனன். அவன் அரசாளுகையில் குடிகளுக்குத் துன்பம் என்பதன் பெயரே தெரியாது. அவன் சுத்தவீர சிகாமணி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளாமணி_(வசனம்).pdf/19&oldid=1958488" இலிருந்து மீள்விக்கப்பட்டது