2
சூளாமணி
வழங்கப்பட்டனரென்றே தோன்றுகின்றது. இதுவே யுமன்றி, பழைய புலவர்களுக்கும் அவர்கள் நூல்களுக்கும் அவரவர்கள் செய்யுட்களிற்பிரயோகித்த ஒவ்வோர் அருமையான. தொடர்மொழி காரணமாகப் பெயர் வழங்கி வந்ததாகவும் தெரிகிறது. மலைபடுகடாம் என்ற அருந்தொடர் மொழியால் அத்தொடர் வந்துள்ள கூத்தராற்றுப் படையும் பிற்காலத்தில் வழங்க லாயிற்று. கல்பொரு சிறு நுரையார், தேய்புரி பழங்கயிற்றினார், மீனெறி தூண்டிலார் என்ற புலவர்கள் பெயரும் அவர்கள் உபயோகித்த அவ்வருந் தொடர் மொழிகளைக் கொண்டே வழங்கப்படலாயின. இங்ஙனமே, சூளாமணி நுலாசிரியரும், தோல்வி யடை யாத என்ற பொருளில் தோலா' என்ற சொல்லைத் தமது காப்பியத்தில் அருமையாய்ப் பிரயோகஞ் செய்துள்ளார். "ஆர்க்குந் தோலா தாய்" அரசியற் சருக் கம், 349)"தோலா நாவிற் சுச்சுதன் சொல்லும் பொருளெல்லாம்" (மந்திரசாலைச் சருக்கம், 10) என்ற இட ங்களில் இவர் 'தோலா' என்ற மொழியை உபயோகித்த அருமையைக் கொண்டு புலவர்கள் இவரைத் தோ லாமொழித் தேவர் என்று கூறினர், எனலும் பொருந்தும். ஆதலின் ஈண்டுக்கூறிய இரண்டு காரணங்களில் எதுபற்றியாயினும், இவர்க்கு வழங்கிய தோலாமொழித் தேவர் என்ற பெயர் இயற்பெயரன்றிக் காரணப் பெயரென்றே துணியப்படும். தேவர் என்ற பெயர்ப் பகுதியால் இவர் ஜைனரென்பது போதரும்.
சூளாமணிக் கதை ஆருகத மகா புராணமாகிய ஸ்ரீ புராணத்தில் சிரேயஸ்வாமிகள் புராணத்தி னிறுதியிற்