உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளாமணி (வசனம்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

3

கூறப்பட்டுள்ளது. அதன் கண், கதாநாயகனான திவிட்ட குமாரனுடைய முற்பிறப்பின் வரலாறு காணப் படுகின்றது. அதனைப் பின் வருமாறு சுருக்கி வரைகின்றாம்:—

"மகததேசத்தில் இராஜக்குக நகரத்தில் விசுவபூதி என்ற ஓரரசனிருந்தான்; அவன் மனைவி ஜைநி. அவர்களுக்கு விசுவகந்தி என்ற பெயருடையவோர் புதல்வ னிருந்தான். விசுவபூதி அரசாண்டு வருகையில் ஒரு நாள், திரண்டிருந்த சரத்கால மேகமெல்லாம் காற்றாற் சிதறுண்டு நாசமடைந்ததைப் பார்த்து, உலக வாழ்க்கையில் வெறுப்புக்கொண்டு, தனது தம்பியாகிய விசாகபூதிக்கு முடிசூட்டுவித்துத் தன் புதல்வனாகிய விசுவநந்நியை இளவரசாக அமைத்துத் தான் ஸ்ரீதா முனிவரரிடம் தீக்ஷைபெற்றுத் துறவியாயினான்.

விசுவநந்தி யுவராஜா அத்தியந்த விசுவாசத்தோடு பரிபாலித்துவந்த மநோஹரமென்றதோர் உத்தியானவனம் அதிக இரமணீயமாயிருந்தது. அதில் பற்பல விதமான புஷ்பச்செடிகளும் அபூர்வ விருக்ஷங்களும் செறிந்திருந்தன. ஒருநாள் விசாகபூதியின் புதல்வனாகிய விசாகநந்தி யென்பான் இந்த மநோஹரோத்தியான வனப்பினைக் கண்ணுற்று அச்சோலையைத் தன்னதாகப் பெறவேண்டுமென்னும் பேராசை கொண்டதுமன்றி, அவன் உடனே தன் பிதாவினையடைந்து, "விசுவநந்தியால் கற்பிக்கப்பட்ட மநோஹரோத்தியான வனத்தினை எனக்குத் தந்தருளவேண்டும். இன்றேல் யான் தேசத்தைவிட்டு ஓடிப்போவேன்" என்று நிர்ப்பந்தித்தனன். அவனது உபத்திரவத்தினைப் பொறுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளாமணி_(வசனம்).pdf/7&oldid=1957881" இலிருந்து மீள்விக்கப்பட்டது