உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளாமணி (வசனம்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

சூளாமணி

முடியாத தந்தையும் அச்சோலையைத் தன் மைந்தனுக்கு உபாயத்தால் வாங்கிக்கொடுக்க நினைத்துத் தனது ஜேஷ்ட ப்ராதாவின் குமாரனாகிய விசுவநந்தியை யழைத்து, "குமாரனே,நமது சத்துருக்கள் மிக்க பலத்தை யடைந்தவராய்ச் சதுரங்க சைனியமும் கூட்டி நம்மேற் போர்க்குவரச் சன்னத்தராயிருக்கின்றனர். அதற்கு முன் யானே அவர்மேற் படையெடுத்துச் சென்று அவரை வென்று மீளும் அளவும் நீ இராஜ்யரக்ஷணம் பண்ணிவருவாயாக" என்று கூறினன். அதனைக் கேட்ட விசுவநந்தி அரசனைநோக்கி, "ஐய! இந்தச் சத்ரு பங்கமாகிய க்ஷத்ரகாரியத்தில் யானே சமர்த்தன், ஆதலால் இக்காரியத்தில் அடியேனை அனுப்பியருளுங்கள்; யான் சென்று பகையைவென்று வருவேன்" என்று விண்ணப்பித்தனன். விசாகபூதி தன்கருத்து நிறைவேறியதான் மனங்களித்து, விசுவநந்திக்குப் பகைவர்மேற் போருக்குச்செல்ல அனுமதி யளித்தனன். அவனும் நால்வகைப் படையுடனும் கருதிய தேசத்தின்மேற் போருக்குச் சென்றனன்.

பிறகு விசாகபூதி மநோஹரோத்தியானத்தினைத் தன் புதல்வனுக்குக் கொடுப்ப, அவனும் அதனுள் இருந்து பலவித சுகபோகங்களை அனுபவித்து வந்தனன். போருக்குச் சென்ற விசுவநந்தி, தனது சிறிய தகப்பன் செய்த வஞ்சகத்தைத் தன் நண்பர் மூலமாய் அறிந்து அடங்காக் கோபங்கொண்டு மீண்டு இராஜக்ருக நகரமடைந்து விசாகநந்தியை எதிர்த்துப் போர் செய்த னன். பலமற்ற விசாகநந்தி அன்னோன் போருக்கு ஆற்றாது தோற்று ஓடி யொரு விளாமரத்தில் ஒதுங்கி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளாமணி_(வசனம்).pdf/8&oldid=1957882" இலிருந்து மீள்விக்கப்பட்டது