பக்கம்:சூழ்ச்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 - சூழ்ச்சி சேனுபதி : கமது கோக்கம் வெறும் தொல்லே கொடுப்பது மட்டுமல்ல. ஆனல் சித்தாரை மீட்பதற்கு நம்மிடம் போதிய படை பலம் இன்னும் ஏற்படவில்லேயே ? ஹமீர்சிங் அது என்றைக்கும் ஏற்படாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆரவல்லி மலைக்குள்ளே நமக்கு எப்படி லக்ஷக்கணக்கான வீரர்கள் கிடைக்கப் போகிருர்கள்? மந்திரி, உங்கள் அபிப்பிராயமென்ன ? மந்திரி அரசே, நமது படையைச் சேர்ந்த ஒவ்வொரு வரும் சுத்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. தாங்கள் உத்தரவிட்டால் என்ன வேண்டுமானலும் செய்யத் தயாராக இருக்கிருர்கள். ஆனல் மால்தேவின் படை பலத்தை எண்ணிப் பார்த்து நாம் காரியம் செய்ய வேண்டும். நமது படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தப் புது உபாயம் தேடவேண்டும். ஹமீர்சிங் : மந்திரி, கமது வீரத்தைப் பற்றிப் பெருமை பாராட்டிக்கொள்ள கான் இஷ்டப்படவில்லே. காயில் வசம் என்ற இந்தச் சிறு காடு மலேகளின் மத்தியிலிருக் கிறது. அதனால் பயமின்றி இதில் மறைந்திருந்து கொண்டு வீரம் பேசுகிருேம். இதுவா வீரம் ? சேனபதி : ராணு, தாங்கள் விரும்பினல் இப்பொழுதே சித்துரரை கோக்கிப் படையை கடத்த கான் தயார். இங்கே கூடியுள்ள நமது கண்பர்களின் முன்னல் தங்கள் உள்ளக் கருத்தை உடனே கூறுங்கள். ஹமீர்சிங் : கான் பல காட்களாக யோசனை செய்து ஒரு முடிவிற்கு வந்திருக்கிறேன். அதைக் கூறவே உங்கள் அனேவரையும் அழைத்தேன். நமது நண்பரும் உறவினரு மான சந்தாரா தலைவரும் வந்திருப்பது எனக்கு ஊக்க மளிக்கிறது. இவ்வாறு இந்த மலே காட்டிலே ஒளிந்து கொண்டிருப்பது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/12&oldid=840671" இலிருந்து மீள்விக்கப்பட்டது