பக்கம்:சூழ்ச்சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 13. மந்திரி : ராணு, மால்தேவ் தங்களுக்குத் தேங்காய்ப் பரிசு அனுப்பியிருப்பதில் ஏதோ சூழ்ச்சியிருக்கின்றது. ஹமீர்சிங் : இதில் சூழ்ச்சி என்ன இருக்கிறது? தேங் காய்ப் பரிசை கான் ஏற்றுக்கொண்டால் அவனுடைய மகளே கான் மணந்து கொள்ள இசைகின்றேன் என்று. சம்மதம் கொடுத்ததாகிவிடும். அதுதானே விஷயம் ? மந்திரி : ஆமாம், அவ்வாறு தம்முடைய மகளே உமக்கு விவாகம் பண்ணிவிட்டால் பிறகு நீங்கள் அவரோடு சண்டையிட நினைக்கமாட்டீர்கள். - சேனுபதி ; பிறகு மால்தேவ் கிம்மதியாகச் சித்துரை ஆண்டுகொண்டு அந்த அங்கியன் அலாவுதீன் கில்ஜிக்குத் தொங்கு சலாம் போட்டுக்கொண்டிருக்கலாம். அவன் தொல்லையெல்லாம் திர்ந்து போகும். ஹமீர்சிங் (ஏளனமாக) . நான் என் சிறிய தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு மால்தேவின் மகளோடு மானமின்றிக் கூடிக் குவாவிக் கொண்டிருப்பேன். அப்படித்தானே? சேனபதி ; ராணு, தாங்கள் அப்படிச் செய்வீர்களென்று நான் ஒரு போதும் குறிப்பிடவில்லை. ஹமீர்சிங் (சிரித்துக்கொண்டு : சேனபதி, உங்கள்மீது ஏதோ குற்றம் கண்டுபிடிப்பதாக வினைக்கவேண்டாம். இருந்தாலும் ஒரு ரஜபுத்திரன் இந்த கிலேமையிலே என்ன செய்யவேண்டும் என்று என்ருக எண்ணிப் பார்க்க வேண்டாமா ? மந்திரி, உங்கள் யோசனை என்ன? மந்திரி : இதில் யோசனை என்ன இருக்கிறது? வந்த வழியைப் பார்த்துக்கொண்டு போகும்படி துரதனே உடனே அனுப்ப வேண்டியதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/17&oldid=840676" இலிருந்து மீள்விக்கப்பட்டது