பக்கம்:சூழ்ச்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி f5 அஜேசிங்கின் தலேமையில் நமது சேனை சித்துரைத் தாக்கிய ஒரு சமயத்தில் அவன் அம்பு பட்டு மடிக் தானும்...மகள் மட்டும் இப்பொழுது இருக்கிருள். சந்தாரா தலைவர் : ஒகோ அப்படியா? சரி சரி. அவன் இப்பொழுது பெண் கொடுத்து உன்னத் தன் பக்கம் இழுத்துக்கொள்ளப் பார்க்கிருன். ஹமீர்சிங் கான் அப்படி கினேக்கவில்லை. அவனுக்கு ஒரே பெண்தான் உண்டு என்ருல் அவனுக்குப் பிறகு சித்துரளின் அரசுரிமை எனக்கு வருமாறு செய்வதை அந்த அலாவுதீன் சம்மதிப்பான? அவனுடைய சம்மத மில்லாமல் மால்தேவ் இந்தக் காரியத்தை கினேத்திருக்க முடியுமா ? - சேனபதி : சித்துரரின் அரசுரிமை தங்களுக்கு வந்தாலும் நீங்கள் அலாவுதீனின் பிரதிநிதியாகத்தானே இருக்க வேண்டும்? அப்படி இருக்கவேண்டுமென்றுதான் அவன் கனவு கண்டுகொண்டிருக்கிருன். சந்தாரா தலைவர் : நீண்ட காலமாக இந்தச் சூழ்ச்சி தானே கடக்கிறது? எப்படியாவது சித்துர் ராணுவைத் தமது வசம் திருப்பவேண்டுமென்று முயற்சி செய் கிருர்கள். இதுவரை அது பலிக்கவில்லை. ஆளுல் இந்தத் தந்திரம் இன்று மாத்திரம் பலிக்கவா போகிறது? ஹமீர்சிங் சித்துரிலே ராஜப் பிரதிநிதியாக இருக்கும் உரிமை கிடைத்தால் பிறகு அதை உபயோகப்படுத்திக் கொண்டு அலாவுதீனுக்குப் பணிய மறுத்துவிட்டால் என்ன செய்வதென்று அவன் யோசித்திருக்கக் மாட்டான? சித்துாருக்குள்ளே நம்மை நுழைய வைத்து விட்டுப் பிறகு சித்துார் தன்னுடையதாக இருக்குமென்று அவன் கினேக்கமாட்டான். நீங்கள் எண்ணுவது சரி யில்லை என்று எனக்குப் படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/19&oldid=840678" இலிருந்து மீள்விக்கப்பட்டது