பக்கம்:சூழ்ச்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 27 ஹமீர்சிங் : மால்தேவ் ஒரு ரஜபுத்திரன்தானே? பாடினி : ஆமாம், அங்கியன் வீசியெறிந்த எச்சிலே உண்டு வாழ்கின்றவன். அவன் பிறப்பால் ரஜபுத்திரளுக இருந்தாலும் செய்கையில் அந்தப் புனித ஜாதியை இழந்துவிட்டான். அதுமட்டுமல்ல...... - ஹமீர்சிங் : பாடினி, உன்னுடைய துடுக்கான பேச்சுக் கேட்பதற்கு இன்பமாகத்தான் இருக்கிறது...ஆனல் பாட்டுப் பாடுவதை விட்டுவிட்டு இப்படி அரசியல் விவ. காரமெல்லாம் பேசுவதற்கு முன் வராதே...என் முன் னிலையிலே மால்தேவை இழிவாகப் பேசும் நீ வேருே ரிடத்திலே என்னேப் பற்றியும் அப்படித்தான் பேசுவாய். பாடினி ராணு, நீங்கள் மால்தேவின் மகளான அந்தக் கமலாதேவியின் விருத்தாந்தத்தை நன்கு அறிந்து கொள்ளவில்லை...அவள் ... ஹமீர்சிங் போதும் போதும். ராஜதிே பேசுவதைவிட்டு வாழ்க்கைச் சரிதம் படிக்க ஆரம்பித்துவிட்டாயா? மந்திரி, இவளுக்குத் தக்க சன்மானம் கொடுத்து அனுப் புங்கள். பாடினி நான் பரிசு பெற்றுப்போக வரவில்லை. உங்க ளுக்கு எச்சரிக்கை செய்யவே வந்தேன், ஹமீர்சிங் மந்திரி, இந்தத் துடுக்குக்காரியைச் சிக்கிரம் அனுப்பி வையுங்கள். பாடினி, நீ இவ்வளவு துடுக்காகப் பேசுவது உன் தொழிலுக்கு உகந்ததல்ல. பாடினி ராணு, ஒரு வார்த்தை தங்களுடன் தனித்துப் பேச அநுமதி தரமாட்டீர்களா? r ஹமீர்சிங் : உன் எச்சரிக்கையை முன்பே புரிந்து கொண்டேன். நீ போகலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/31&oldid=840691" இலிருந்து மீள்விக்கப்பட்டது