பக்கம்:சூழ்ச்சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம் இரண்டு-காட்சி ஒன்று (திருமணம் கடந்த அதே நாள் இரவு. முழு நிலவு காய்கிறது. ஹமீர் சிங்கும் கமலா தேவியும் தமது படுக்கை அறையில் பேசிக்கொண்டிருக்கிருர்கள்.) ஹமீர்சிங் . கமலா, இப்படி என் அருகிலே வா. ஏன் தயங்குகிருய்? சித்துரருக்கு நான் நாயகனாக இப்பொழு தில்லாவிட்டாலும் உனக்கு கான் நாயகன்தானே ? கமலாதேவி : ராணு, தாங்கள் எனக்கு நாயகனுக வாய்த்ததில் கான் எவ்வளவோ பெருமையும் சந்தோஷ மும் அடையவேண்டும்; ஆல்ை அவற்றிற்கெல்லாம் தடையாக ஒரு முக்கியமான சம்பவம் குறுக்கே கிற் கிறது. அதைப் பற்றி கான் தங்களிடம் முதலில் கூற விரும்புகிறேன். அது மதியளிக்கவேண்டும். w ஹமீர்சிங் : என்ன அப்படிப்பட்ட முக்கிய விஷயம் ? உன் தந்தை மால்தேவ் எனக்கு விரோதியாதலால் கான் அவருடன் சிநேகம் பாராட்டமாட்டேன் என்று வருந்து கிருயா? கமலாதேவி இல்லை. என் தந்தை தங்களுக்கு மட்டும் விரோதியல்ல. அவர் எனக்கும் விரோதிதான். ஹமீர்சிங் : உண்மையான பதிவிரதை கணவனுடைய விரோதிகளே அவர்கள் யாராயிருந்தாலும் தனதுவிரோதி களாகக் கருதவேண்டும். ங் அவ்வாறு கினேப்பதில் கான் மகிழ்ச்சியடைகிறேன். கமலா, இங்கே வா. இன்று நிலவின் வெண் முத்துச் சுடர்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன பார். கிலா முற்றத்துக்குப் போகலாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/36&oldid=840696" இலிருந்து மீள்விக்கப்பட்டது