பக்கம்:சூழ்ச்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி - 35 ஹமீர்சிங் ஹா, நீ கூறுவதென்ன? பெண்ணின் ரத்தமா? இருந்தாலும் நீ என் குலத்தைக் கெடுத்தவள். (தயங்கி கிற்கிருன்.) கமலாதேவி : தங்கள் பாட்டி பத்மினி தேவிக்காக ஆயிரக்கணக்கான ஆடவர்கள் தங்கள் உயிரைப் பலி கொடுத்தார்கள். தங்கள் உயிருக்கு மேலாக மதித்திருந்த இந்தச் சித்துரையும் இழந்தார்கள். தங்கள் தந்தை யாரும் அவர்களில் ஒருவர்... ஒரு பெண்ணுக்காக அவர்கள் அனைவரும் தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். ஆளுல் நீங்கள் ஒரு பெண்ணே வாளால் துணிக்க கினேக் கிறீர்கள். இதுதான் உங்கள் குலத்திற்குப் பெருமையா? ஹமீர்சிங் : அடி பாதகி-உன் தந்தை என்னே அவ மானப்படுத்த உண்டாக்கிய இந்தச் சூழ்ச்சியில் நீயும் உடந்தையாக இருந்திருக்கிருய்... கமலாதேவி கான் அவருடைய சூழ்ச்சிக்கு ஒருபோதும் உடந்தையல்ல.அதைத் தடுக்க எவ்வளவோ முயன் றேன். தெய்வ சாட்சியாகச் சொல்லுகிறேன்...இந்த விஷயத்தைப் பற்றித் தங்களே எச்சரிக்கப் பலவகைகளி லும் உபாயம் தேடினேன்...... ஆனல் என் தந்தை அவற்றையெல்லாம் தடுத்துவிட்டார்...மணவறைக்கு வரும் வரையிலும் கான் ஒரு சிறைக் கைதி போலவ்ே இருந்தேன். இருந்தாலும் அந்தப் பாடினியைத் தங்க ளிடம் அனுப்பினேன். ஆனல் நீங்கள் அவள் செய்த எச்சரிக்கையை மதிக்கவில்லை. அவளோடு தனியாகப் பேச மறுத்துவிட்டீர்கள். ஹமீர்சிங் எனது மந்திரிகளும் மற்றவர்களும் எவ். வளவோ தடுத்தும் அவர்கள் யோசனையை மதிக்காது. நான் இந்த அவமானத்தைத் தேடிக் கொண்டேனே! பாடினியை யோ அனுப்பிய்ை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/39&oldid=840699" இலிருந்து மீள்விக்கப்பட்டது