பக்கம்:சூழ்ச்சி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூ ழ்ச்சி சித்துர்க் கோட்டை ரஜபுத்திரர்களின் வீரத் திற்கும் அழியாப் புகழுக்கும் சின்னமாக விளங்கு கிறது. அதை ஆண்ட ராணுக்களில் லகஷ்மண சிங்கின் மனைவியான பத்மினியின் அழகு பிரசித்தி வாய்ந்தது. அவளைக் கைப்பற்ற விரும் பிய டெல்லி சுல்தான் அலாவுதீனின் முயற்சியும், சித்துார் முற்றுகையும், எதிர்த்துப் போராடிய ரஜபுத்திரர்களின் சாகசச் செயல்களும் தியாகமும் அனைவருக்கும் தெரிந்தவையே. ல கூடி ம ன சிங்கும், பதினுெரு அரசிளங் குமாரர்களும் சண்டையிலே உயிர் துறந்தார்கள். கோட்டை அலாவுதீன் வசமாகுமுன் பத்மினி தீக்குளித் தாள். லகஷ்மணசிங் தமது இரண்டாவது மகளுன அஜேசிங்கை மட்டும் முன்னதாகவே ஆரவல்லி மலைகளினிடையேயுள்ள காயில்வரத்திற்கு இரக சியமாக அனுப்பியிருந்தார். காயில்வரத்தி லிருந்து கொண்டு சித்துரை மீட்க அஜேசிங் எவ்வளவோ முயன்றும் பயன்கிடைக்கவில்லை. அஜேசிங் தனது தாய் பத்மினிக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமலேயே உயிர்விட நேர்கிறது. இந்தப் பின்னணியைக் கொண்டு சித்துாரின் வரலாற்று நிகழ்ச்சிகளையே பெரும்பாலும் தழுவி இந்த நாடகம் உருவாகிறது.

)

10–2–’55 பெ. து ர ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/4&oldid=840700" இலிருந்து மீள்விக்கப்பட்டது