பக்கம்:சூழ்ச்சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 47 (வெளியிலே மறுபடியும் கோஷம் கேட்கிறது. “ஜய, ஜயஹே, சித்துரரின் இளேய ராணு வாழ்க...பல்லாண்டு பல்லாண்டு வாழ்க" என்னும் முழக்கம் கேட்கிறது.) ஹமீர்சிங் : சித்துரை மீட்கும் வரையில் யாதொருவித மான கொண்டாட்டமும் கூடாதென கான் உத்தரவிட் டிருக்கிறேனல்லவா ? மந்திரி : மக்களுக்கு அந்த உத்தரவு கன்ருகத் தெரியும். இருந்தாலும் ராணி கமலா தேவியின் மேலுள்ள அன் பினல் அவர்கள் இப்படி கடந்துகொள்கிருர்கள். ஹமீர்சிங் . கமலாதேவி எப்படி மக்களுடைய உள் ளத்தையெல்லாம் கவர்ந்துவிட்டாள் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அவளேப் பாராட்டிப் போற்றிப் பேசாதவர்களே இல்லை. மந்திரி : ராணு, தாங்கள் கூறுவது மெய்தான். ராணி யிடத்திலே மக்களுக்குத் தனிப்பட்ட ஒர் அன்பிருக் கிறது. மக்களின் நலத்திற்காக அவர்கள் செய்யும் சேவையை ஒவ்வொருவரும் அறிந்திருக்கிருர்கள். ஹமீர்சிங் படை வீரர்களும் அவளுக்குப் பணிந்து கடக்கிருர்களே ! மந்திரி : கல்யாணமாகி வந்தவுடனே ராணி கமலாதேவி நமது வீரர்களுக்கு ஒரு பிரசங்கம் செய்தார்கள் என்பது தங்களுக்குத் தெரிந்திருக்கலாம். சித்துரைப் பற்றிப் பேசும்போது அவர்களுடைய சாந்தமான முகத்திலே நெருப்புப் பொறி பறந்தது. வார்த்தைகள் அனல் கக் கின. நமது வீரர்களும் சேனபதியும் அன்றே ராணியைத் தெய்வமாகக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/51&oldid=840713" இலிருந்து மீள்விக்கப்பட்டது