பக்கம்:சூழ்ச்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 51 காட்சி நான்கு (கமலாதேவி அரண்மனைப் பூங்காவில் அமர்த்திருக் கிருள். பாடினி அருகே அமர்ந்து உரையாடிக் கொண் டிருக்கிருள். மாலே கேரம்.) - - பாடினி : ராணிபாய், கோட்டை வாயிலைக் காக்கும் வீரர்கள் மகா பொல்லாதவர்களாக இருக்கிருர்கள். கமலாதேவி : என், ஏதாவது தொந்தரவு கொடுத்தார் களா ? பாடினி : தொந்தரவொன்றுமில்ல. ஒவ்வொரு தடவை கான் வரும்போதும் அவர்களுக்கு ஒரு பாட்டாவது பாடி யாக வேண்டும். இல்லாவிட்டால் விடமாட்டார்கள். கமலாதேவி உனது பாடல்கள்தான் இப்பொழுது காயில்வரத்திலே எங்கு பார்த்தாலும் ஒலிக்கின்றன. பாடினி : இங்கு மட்டும் ஒலித்தால் போதுமா? சித்துர ரிலே அப்படி ஒலித்தால் அப்பொழுதுதான் எனக்குத் திருப்தியேற்படும். - கமலாதேவி : வெகு விரைவிலே உன் ஆசை கிறைவேறி விடும், கவலைப்படாதே. பாடினி : ராணிபாய், நான் இதுவரை பத்துத் தடவை இங்கு வந்து விட்டேன். கமலாதேவி : பதினேராவது தடவை இங்கு வந்து என்னைச் சந்திக்க வேண்டிய அவசியமிராது. எனது திட் டத்தை நிறைவேற்ற வேண்டிய காலம் நெருங்கி விட்டது. - பாடினி (மகிழ்ச்சி பொங்க) அடுத்த முறை சித்துரர் லேயே சந்திக்க முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/55&oldid=840717" இலிருந்து மீள்விக்கப்பட்டது