பக்கம்:சூழ்ச்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 57 மால்தேவ் : என்ன தோரணையாகக் கேள்வி போடு கிருயே ? காயில்வரத்துத் தண்ணிரைக் குடித்தால் இந்தக் குணம் உண்டாகும்போலிருக்கிறது. கமலாதேவி (கோபமாக) குழந்தையின் ஆண்டு நிறை வுக்கு அழைக்கக்கூட உங்களுக்கு வகையில்லை. என்னை அழைத்தால் உங்கள் எஜமான் அலாவுதீன் தண்டித்து விடுவாரோ ? - மால்தேவ் . அவரைப்பற்றி எதற்காகப் பேசுகிருய்? சித்துாரிலே கான்தான் எஜமான். கமலாதேவி (வெறுப்போடு). அந்நியனுடைய காலுக்குச் சேவகம் பண்ணி வாழ்வதைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ள வேண்டாம். மால்தேவ் என்னுடைய சேவகம் அவ்வளவு கேவல மாகத் தோன்றினல் எதற்காக இங்கே வந்தாய் ? கமலாதேவி : ஆண்டுநிறைவு கொண்டாடாமல் ஊரெல் லாம் சிரிக்கக்கூடாதே என்பதற்குத்தான் வங்தேன். அங்கியனுக்கு அடிமையாக இருந்தாலும் இன்னும் என் தந்தை தமது மகளே மறந்துவிடவில்லை என்று மக்கள் நம்பவேண்டாமா ? மால்தேவ் (கோபமாக) . ஒகோ, விதவை பெற்ற மக லுக்கு ஆண்டு கிறைவுக் கொண்டாட்டம்வேறு கேடா ? கமலாதேவி : என்ன சொன்னிர்கள் ? இந்த வார்த்தை யைச் சொல்லவும் உங்களுக்கு காவிருக்கிறதா? என்னை விதவையாக்கியது யார்? உங்களுடைய வஞ்சகத்திற்கும் தந்திரத்திற்கும் என்னைப் பலிகொடுத்துவிட்டு இப்படி யும் பேச கெஞ்சம் துணிகின்றதா? மால்தேவ் சரிசரி, வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டுப்போ. நான் மதாரியா காட்டு மீர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/61&oldid=840724" இலிருந்து மீள்விக்கப்பட்டது