பக்கம்:சூழ்ச்சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 63 காட்சி ஏழு (சித்துரர் அரண்மனேயில் ஒரு மண்டபம். ஹமீர்சிங் கும் கமலாதேவியும் பேசிக் கொண்டிருக்கிருர்கள்.) ஹமீர்சிங் கமலா, சித்துார் ஒருவகையான ஆர்ப்பாட் டமுமின்றி கம் வசமாகிவிட்டதே? கமலாதேவி (மகிழ்ச்சியேடு) : எ ன் னே ஒரு வகை யான ஆர்ப்பாட்டமி முன்றித்தானே அன்று கைப்பற்றி னிர்கள்? அதே போல இன்று சித்துரரும் உங்களுக்குக் கிடைத்துவிட்டது. ஹமீர்சிங்: என்ன இருந்தாலும் எனக்கு இது பிடிக்க வில்லை...இது கோழைகள் செய்கையென்று எனக்குப் படுகிறது. கமலாதேவி : உங்களுடைய சொந்த உடைமையை எடுத் துக் கொள்வதிலே கோழைத்தனம் என்ன இருக்கிறது? ஹமீர்சிங் சண்டை செய்து எதிரிகளை வென்று உள்ளே நுழைந்திருந்தால் எனக்குத் திருப்தியாக இருக் திருக்கும். கமலாதேவி ஏன் இப்பொழுதுகூடச் சண்டை கடக்க வில்லையா? - - ஹமீர்சிங் : அது என்ன சண்டை? ஏதோ சில நூறு வீரர்கள் கோட்டையில் இருந்தார்கள். அவர்களும் சரி யானபடி எதிர்த்து கிற்கவில்லே. ஒருவேளே முன்ன தாகவே நீ அவர்களே உன் வசப்படுத்தி விட்டாயோ என்னவோ? கமலாதேவி (சிரித்துக்கொண்டே) உங்கள் வீரத்தை யெல்லாம் காட்டச் சீக்கிரம் சந்தர்ப்பம் வரப்போகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/67&oldid=840730" இலிருந்து மீள்விக்கப்பட்டது