பக்கம்:சூழ்ச்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - சூழ்ச்சி மால்தேவ் : அவர்களையெல்லாம் அந்தப் பெண் எப் படியோ வசப்படுத்தி விட்டாள். அலாவுதீன் : எந்தப் பெண் ? மால்தேவ் : என் மகள்தான்-கமலா. அலாவுதீன் : அவள் எப்படி உள்ளே வந்தாள் ? மால்தேவ் : மகனுக்கு ஆண்டு நிறைவு என்று கூறிக் கொண்டு நல்ல சமயம் பார்த்து அவள் அங்கு வந்திருக் தாள். f அலாவுதீன் (கோபமாக) . மால்தேவ், நீ கூறுவதைப் பார்த்தால் ஏதோ பெரிய சூழ்ச்சி நடந்திருக்கிறது...நீயும் அதில் சேர்ந்திருப்பாய் போலத் தோன்றுகிறது...இங்கு வந்து பசப்பு மொழி பேசி என்னே ஏமாற்றப் பார்க் கிருயா? மால்தேவ் . சக்ரவர்த்தியே, கான் என்றும் தங்களுக்குத் துரோகம் செய்ய கினேக்கமாட்டேன். அலாவுதீன் : என்னேக் கேட்காது நீ உன் மகளே ஹமீர் சிங்குக்கு மணம் செய்து கொடுத்த போதே சந்தேகப்பட் டேன்...அப்பொழுதும் விதவையென்று சொல்லி என்னை ஏமாற்றியிருக்கிருய்...ஹமீர்சிங்கை அவமானப்படுத்துவ தாகக் கூறி நாட்டையே அவனுக்குக் கிடைக்கச் சூழ்ச்சி செய்திருக்கிருய். மால்தேவ் : நான் மீண்டும் சத்தியமாகச் சொல்லு கிறேன். நான் யாதொரு வஞ்சனேயும் கினைக்கவில்லை. எனது சூழ்ச்சியையே பயன்படுத்திக்கொண்டு அவர்கள் என்னே ஏமாற்றியிருக்கிருர்கள். அலாவுதீன் (கோபத்தோடு): நீ சொல்லுவதை நான் நம்ப முடியாது...யாரடா அங்கே? இந்த வஞ்சகனக் கைது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/70&oldid=840734" இலிருந்து மீள்விக்கப்பட்டது