பக்கம்:சூழ்ச்சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சூழ்ச்சி வாசத்தை எல்லோருக்கும் தெரியும்படி செய்கிறேன். பாதுஷா, போய் வருகிறேன். விடையளியுங்கள். (மறுபடியும் மண்டியிட்டுப் பணி கிருன்.) திரை காட்சி ஒன்பது (போர் ஆரவாரம் கேட்கிறது. சித்துார்க் கோட்டைச் சுவருக்கு முன்னல் வீரர்களுடன் கமலாதேவி பேசிக் கொண்டிருக்கிருள்.) கமலாதேவி வீரர்களே, உங்களுடைய ஆண்மை முழு வதையும் காட்ட கல்ல் சமயம் வந்துவிட்டது. சித்துார் கம்முடைய கண்மணி போன்றது. அதைக் காக்க வேண் டியது தமது கடமை. ரஜபுத்திரனுக்கு உயிர் பெரிதல்ல. அவனுடைய தேசமே பெரிது. இது வரையிலே இந்தக் கோட்டையை அங்கியனுக்காக நீங்கள் காத்தீர்கள். அதிலே உங்கள் மனம் அரைகுறையாகவே ஈடுபட்டி ருந்ததை கான் அறிவேன்; இப்பொழுது இதன் உண்மை யான ராணுவுக்காக நீங்கள் இதைக் காக்கிறீர்கள். மால் தேவ் எனது தந்தையானலும் அவர் அங்கியலுக்கு அடிமை. அவருக்காக நீங்கள் பரிவு காட்டக்கூடாது. சித்துளரின் பகைவர் யாராயிருந்தாலும் சரி, எதிர்த்து மோதி மிதித் தெறியுங்கள். இந்தக் கோட்டையின் காவல் தெய்வம் பவானிதேவி உங்களுக்கு அதுக்கிரகம் செய்வாள். ஜேய் பவானி வீரர்கள் : தேவி, உங்கள் ஆணப்படியே போர் செய் வோம். எங்கள் உயிருள்ள மட்டும் இனி அங்கியன் உள்ளே நுழைய முடியாது. ஜேய் பவானி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/72&oldid=840736" இலிருந்து மீள்விக்கப்பட்டது