26 மலைப்பகுதிகளுக்குச் சென்று மலைவளங் கண்டு வரலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று. தன் னுடைய பட்டத்தரசியோடும் சென்று வருவதாக முடிவு செய்தான். அரசன் மலைவளம் காணச் செல்கிருன் என்பதை அறிந்த அதிகாரிகள் அதற்கு ஆவன செய்தார்கள். மன்னனுடன் யார் யார் செல்வது என்று வரையறை செய்தார்கள். அவனுடன் வேட்டையில் வல்ல சிலர் செல்லும்படி திட்டம் இட்டார்கள். அரசன் வருவதை முன்கூட்டியே மலைப்பக்கத்தில் வாழும் குடிமக்களுக்குச் சொல்லியனுப்பினர்கள். செங்குட்டுவன் மலைவளம் காணும் பொருட்டுப் புறப்பட இருந்தான். அப்போது மதுரையிலிருந்து சாத்தனுர் வந்தார். அவரைக் கண்ட மன்னன், 'நல்ல சமயத்தில் வந்தீர்கள்' என்ருன். 'நல்ல சமயமா? நான் மன்னர்பிரானைக் காணும் நேரம் யாவுமே நல்ல நேரமென்றே என் அனுபவத் தில் உணர்கிறேன்.' - "அப்படி அன்று. இப்போது நான் மலைவளம் காணப் புறப்பட்டுக்கொண் டிருக்கிறேன். அங்கே உள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு இன்புறலாம் என்பது என் விருப்பம். நீங்களும் உடன் இருந்தால் அந்த இன்பம் பன்மடங்காகும். இயற்கையின் எழிலைப் புலவர்களைப் போலக் கண்டு களிப்பவர்கள் யார் இருக்கிருள்கள்?" 'அப்படியால்ை மன்னர்பெருமானுக்கு என்னை யும் உடன் அழைத்துச் செல்லத் திருவுள்ளமோ?’’
பக்கம்:செங்கரும்பு.pdf/32
Appearance