பக்கம்:செங்கரும்பு.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அசைபோடும் பசுமாடாய், அறிவைத் தந்த ஆண்டவனை நினைக்கின்றேன்; ஆசை யோடு இசைபாடும் பூங்குயிலாய் அவனின் பேரை - இன்பமுடன் பாடுகின்றேன்! கிளைகள் திோறும் விசையோடு தாவுகின்ற அணிலைப் போல விளையாடும் அவன்செயலில் மகிழ்கின் றிேன்நான். திசைக்கருவி காற்றடிக்கும் திசைகள் தோறும் திரும்புதல்போல் அவன் திசையைத் தொழுகின் - m றேன்.நான். 2 இரவுக்கும் பகலுக்கும் மாற்ற மில்லை எழிலார்ந்த சூரியனும் இல்லை யென்ருல்! விறகுக்கும் உடலுக்கும் பேத மில்லை, வீற்றிருக்கும் உள் உயிர்தான் விரைந்தே போளுல் வரவுக்கும் செலவுக்கும் மட்டு மிந்த வாழ்க்கையிலை; வளர்பிறைபோல் பெருகும் இன்ப o உறவுக்கும் உள்ளுணர்வின் வளர்ச்சிக் குத்தான்! உலகமெலாம் உயர்ந்தோரின் உள்ளந் தானே! 29 குழந்தையெலாம் தாயிடத்தே காட்டும் அன்பு . கூடும்சுவை சோற்றினிலே காட்டும் ஆர்வம்! அழகியதோர் பொம்மையினை அணைக்கும் ஆசை அடுத்தடுத்து அதைஎண்ணி சிலிர்க்கும் நெஞ்சம் பழகுகின்ற மற்றவர்மேல் கொள்ளும் பாசம், +. பக்திக்கும் இவைபொருந்தும். பக்தி என்ருல் குழந்தையெனும் மக்களுக்கும் கடவுள்' தாய்க்கும் கூடிவரும் அன்பென்னும் கொடுக்கல் வாங்கல். 3'