பக்கம்:செங்கரும்பு.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 வேறு எப்படி அவர்களுக்கு நாம் வருவதை அறிவிப்பது?” - 'வஞ்சி மாநக்ரில் நமக்குத் தெரியாமல் பல நாட்டு ஒற்றர்கள் இருக்கிருர்கள். அவர்களுக்குச் செய்தி தெரியுமானுல் தங்கள் அரசர்களிடம் போய்ச் சொல்வார்கள். ஆதலால் நாம் நகரம் சென்று அங்கே வீதிகளில் முரசறைந்து செய்தியை அறி விக்கும்படி செய்தால் போதுமான தென்று நினைக் கிறேன்' என்று காரணத்துடன் விடை கூறினர், அழும்பில் வேள். மன்னன் அந்தக் கருத்தை ஒப்புக் கொண்டான். - காணிக்கைகளை வைத்துத் தாம் கண்ட அதிசயத் தையும் சொல்லிவிட்டு விடை பெற்றுக்கொண்டு சென்ருர்கள், மலைப்பகுதியிலிருந்தும் காட்டிலிருந்தும் வந்த மக்கள். அரசனும் தன் பரிவாரத்துடன் வஞ்சி மாநகருக்கு மீண்டான். நகரை அடைந்தவுடன் முதல் வேலையாக யானை மீது முரசறைந்து செய்தியை அறிவிக்கச் சொன்னன். அப்படி அறிவிக்கும் பணியைச் செய்வதற்குரியவர்கள், “சேர மன்னன் வாழ்க! எம்கோ பல்லாண்டு வாழ்ந்து உலகத்தைக் காப்பாற்றட்டும் முன்பே சேர மன்னர் கள் தம் அடையாளச் சின்னமாகிய வில்லைப் பொறித்துள்ள இமயமலைக்குச் சென்று, எம் அரசர் பிரான் கடவுள் விக்கிரகம் அமைக்கும் பொருட்டுக் கல் எடுக்க வரப்போகிருன். வடதிசையில் உள்ள மன்னர்கள் எல்லாம் காணிக்கைகளுடன் வந்து எதிர் கொண்டு அழைப்பார்கள் என்று நம்புகிருேம். இல்லை யானுல் சேரமன்னனுடைய வீரத்துக்கு முன் எதிர்