பக்கம்:செங்கரும்பு.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4t அவன் அவ்வூரில் இருந்த நாடகக் கணிகையாகிய மாதவி என்பவளிடம் காதல் கொண்டு அவளுடன்ே இருந்து வந்தான். அவளுக்குத் தன் செல்வத்தை யெல்லாம் கொடுத்து இழந்தான். மேலும் கொடுக்கப் பொருள் இல்லாமையால் தன் வீடு வந்தான். தன் மனைவி கண்ணகியின் காற்சிலம்பை விற்றுப் பிழைக் கலாம் என்ற எண்ணத்துடன் அவளையும் அழைத்துக் கொண்டு பாண்டி நாட்டை அடைந்தான். மதுரைமா நகரில் கடைவீதியில் சிலம்பை விற்கச் சென்ருன். அப்போது, அரசியின் பொற்சிலம்பு ஒன்றை மறைத்து வைத்துத் திருட்டுப்போயிற்று என்று அரசனிடம் சொல்லியிருந்த பொற்கொல்லன் ஒருவனைக் கண்டான். அவனிடம் சிலம்பைக் கோவலன் காட் டவே அவன், இந்தச் சிலம்பை அணியும் தகுதி பாண்டியனுடைய பட்டத்தரசி ஒருத்திக்குத்தான் உண்டு. நீ இங்கே இரு. நான் அரண்மனை சென்று சொல்லிவிட்டு வருகிறேன்' என்றுகூறிச் சென்ருன். "பொற்கொல்லன் அரசனிடம் சென்று, சிலம்பு திருடினி கள்வனக் கண்டுபிடித்துவிட்டேன் என்ருன். அதைக் கேட்ட அரசன், காவலரை அழைத்தான். இவன் சொன்ன அந்தக் கள்வனைக் கொல்ல, சிலம்போடு அவனை இப்பொழுதே இங்கே கொண்டு வாருங்கள்' என்று சொல்ல எண் ணியவன், ஏதோ நினைவில் ஆழ்ந்திருந்ததலுைம் ஊழ்வினை வந்து விளைகிற காலமாதலினுலும், “அவ னைக் கொன்று சிலம்பை இப்போதே கொண்டு வாருங் கள்' என்று சொல்லிவிட்டான். - "காவலர் அவ்வாறே சென்று கோவலனைக் கொன்றுவிட்டார்கள். அவன் கொலையுண்டதை