இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
52 விழுந்த நெஞ்சம்! குறைவிலா உடலைத் தந்தாய்! குறைவிலே நிறைவைத் தந்தாய்! மறைபொருள் உணரும் வண்ணம் மாண்புடன் மதியைத் தந்தாய்! இறைவனே! உன்னை எண்ணும் இனியஓர் இதயம் தந்தாய்! கறையுடை வாழ்க்கை யேனைக் காப்பதுன் பாரம் ஐயா! ஆசைகள் நெஞ்சில் கோடி! அவை நிறை வேற வில்லை! ஓசைகள் நெஞ்சில் கோடி! உணரவே முடிய வில்லை! மாசுடன் வாழ்வை ஒட்டும் / மனிதனய் படைத்தாய், என்oo : கூசியே கேட்கின் றேன்.நான், குழந்தைநான் காக்க வேண்டும்! உடலிலே உறுதி வேண்டும். உறுதியில் தெளிவு வேண்டும். நடையிலே பொலிவு வேண்டும். * நாளெலாம் வலிவு வேண்டும். இடையிலே இன்னல் வந்தால் ஏற்றிடும் இதயம் வேண்டும். தடைகளை மீறிச் செல்லும் தைரியம் வேண்டும்! வேண்டும்!!