பக்கம்:செங்கரும்பு.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


43 கிறேன்' என்று அந்த வரலாற்றை விரித்து உரைக்க லானுர், 'கலிங்க நாட்டில் சிங்கபுரம் என்ற ஊரில் வசு என்னும் வேந்தன் ஒருவன் இருந்தான்; அந்த நாடடில் கபிலபுரம் என்னும் வேறு ஊரில் குமரன் என்ற வேந்தன் இருந்தான். இவ்விருவரும் தாயாதி கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பகை கொண் டிருந்தனர். ஒருவர் நாட்டிலிருந்து மற்ருெருவர் நாடடுக்கு யாரும் செல்வதில்லை. கபிலபுரத்தில் இருந்த சங்கமன் என்னும் வணிகன் அணிகலன்களை விற்கிறவன். சிங்கபுரத்தில் செல்வர்கள் பலர் வாழ்ந்ததனுல், அங்கே சென்ருல் நல்ல வியாபாரம் ஆகும் என்று அவன் எண்ணினன். தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு அந்த நகரம் சென்று ஆபரணங்களை வியாபாரம் செய்யத் தொடங்கினன். சிங்கபுரத்து அரசனுகிய வசுவினிடம் அரசியல் அதிகாரியாக இருந்தான், பரதன் என் பவன். அவன் தீய குணமுடையவன். அவனுக்குச் சங்கமனைக் கண்டாற் பிடிக்கவில்லை. அணிகலன்களை விலையின்றியே தனக்கு வழங்க வேண்டுமென்று கேட் டிருப்பான்போலும் சங்கமன் அளிக்காமையில்ை அவனுக்குத் தீங்கு புரிய எண்ணின்ை பரதன். அவன் அரசியல் பணி புரிகிற அதிகாரம் உடையவன் அல்லவா? அரசனிடம் சென்று, இந்தச் சங்கமன் கபிலபுரத்தி லிருந்து வந்து இங்கே வாழ்கிருன். ஆபரணங்களை விற்பவனைப் போல இருந்து தொழில் நடத்திலுைம், நம்முடைய பகையரசனுகிய வசுவுக்கு இங்குள்ள இரகசியங்களைத் தெரிந்து சொல்லி அனுப் பும் ஒற்றன் இவன். இவனுல் இந்த நாட்டுக்கும் அரச ராகிய தங்களுக்கும் தீங்கு நேரும் என்ருன் வசுவி