இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48 ஆலுைம் அந்தக் கருத்தை முதலில் வெளியிட அவர் விரும்பவில்லை. இளங்கோவடிகளையே இயற்றும்படி மரியாதைக்குச் சொல்லலாம். இவுர் சேர குலத்தில் பிறந்தவர். ஆதலின் மற்ற மன்னர்களைப் பற்றிச் சொல்ல இவர் விரும்பமாட்டார். நம்மையே இயற்றச் சொல்லி விடுவார்' என்று எண்ணியே அப்படிச் சொன்னர். இளங்கோவடிகளோ, “பார்க்கிறேன். இந்த வர லாறு என் உள்ளத்தை உணர்ச்சி வசமாக்கிவிட்டது. பல அரிய கருத்துக்களை உடையது இந்தக் கதை என் பதை உணர்கிறேன். நன்ருகச் சிந்தித்து எழுதி முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறைவன் திருவருள் கூட்டுவிக்கும் என்றே எண்ணு கிறேன்' என்று சொன்னர். அது கேட்ட சாத்த ருைக்கு ஏமாற்றம் உண்டாகிவிட்டது. ஆலுைம் அதை வெளிக் காட்டிக்கொள்ளலாமா? " நன்ருகச் செய்து முடியுங்கள் ' என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டார்.