பக்கம்:செங்கரும்பு.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 கடவுள் உரு அமைப்பதற்காக இமயம் சென்று கல்லை யெடுத்து, எந்த மன்னர்கள் நம்மை இகழ்ந்தார்களோ அவர்கள் தலையிலே அந்தக் கல்லை வைத்து நான் கொண்டு வராவிட்டால், குடிமக்களைத் துன்புறுத்தும் கொடுங்கோலன் என்ற பழியைப் பெறுவேனுக!” என்று கோபத்துடன் சபதம் செய்து தன் பேச்சை முடித்தான் செங்குட்டுவன். அருகில் இருந்த குலகுரு அவனைக் கையமர்த்தி, 'உன்னுடைய உறுதி மொழிக்கு முன்னே நிற்கும் மன்னரும் இருக்கின்றனரா? அந்தப் பேதையர்கள் அறியாமையால் ஏதோ சொல்லியிருக்கிருர்கள். உன்னை இகழ்ந்ததாகக் கொள்ளக் கூடாது. நீ கோபம் ஆறுவாயாக!' என்று சமாதானப்படுத்தினர். அப்போது அங்கே இருந்த பெருங்கணி எழுந்து, “மன்னர் பெருமானே! இன்று வெற்றிக்கு ஏற்ற நாளாக இருக்கிறது. இன்றே புறப்பட்டால் அரச ரெல்லாம் மன்னர்பிரானின் திருவடியைப் பணிந்து ஏவல் கேட்பார்கள். ஆகவே இன்றே பயணத் தைத் தொடங்குவது நல்லது' என்ருன். அதைக் கேட்டவுடனே, "இந்த முகூர்த்தத்தில் நம்முடைய வாளையும் குடையையும் வடக்கு நோக்கி எடுத்துச் செல்லுங்கள். வடதிசைப் பயணத்தைத் தொடங்கிவிடுவோம்' என்று அரசன் உத்தர விட்டான். அரசன் படையுடன் வடநாட்டுக்குப் புறப்படு கிருன் என்ற செய்தியை முரசறைந்து தெரிவித்தனர். வீரர்கள் ஊக்கத்தோடு ஆரவாரம் செய்தார்கள். படைகளின் கூட்டத்தோடு பல வகை அதிகாரிகளும்