பக்கம்:செங்கரும்பு.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 புனிதப் பணி சுதந்திர நாட்டிலே தூங்கிடும் மக்களே! சுதந்திரப் பேச்செலாம் சோற்றுக்கு ஆகுமா? விழிமின் விழிமின் உலகினைப் பாரீர்! எழுமின் எழுமின் போதுமே உறக்கம்! எத்தனைக் காலம் நாம் இப்படி வாழ்வது? பித்தராய் வாழ்வது பேதமை யன்ருே! உரிமைக் குரலை எழுப்பிடும் சோதரீர்! உரிமைகள் பெற்றது ஒற்றுமை வளர்க்கவே! மொழியில் குழப்பம் முடிவதாய் இல்லை! - வழிபல காணினும் வளருதே தொல்லை! தர்ய்த்திரு நாட்டினை தன்தென எண்ணியே வாய்ச்சுவை கொள்ளவே மொழிபவர்.இல்லை! பொருளைப் பெறவும், புகழைப் பெறவும் குறுக்கு வழியிலே செல்பவர் கோடி கிறுக்குப் பேச்சிலே களிப்பவர் கோடி செருக்குப் பேச்சிலும் திளைப்பவர் கோடி! கோடி கோடியாய் மக்கள் இருந்தும் , கூடியே வாழ்ந்திடக் கருதுவோர் யாரே? சுயநலம் சிந்தையில் ஆட்டியே படைக்கும்! நயமிகு பொதுநலம் நலிந்தே கிடக்கும் எங்கும் இனவெறி! எங்கும் மொழிெ வறி! எங்கும் பணக்குறி! இல்லையே செந்நெறி! வாதத்தில் கிடக்கும் மானிட கோடியே! போதும் போதும் பாரதம் வீழ்ந்தது: போன் நாளெலாம் புண்மிகு நாட்கள். நாணம் வேண்ட்ாம்! நேரம் வந்ததே நாடில்லா விடில் நாமெலாம்.இல்லை! iசடிலா கொள்கை நம் இதயத்தின் எல்லை. .புனிதப் பணியிலே செயல்பட எழுவீர்! இனியும் காலம் கழிப்பது இழுக்கே