பக்கம்:செந்தமிழ் ஆற்றுப் படை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

— 10 – செந்தமிழாற்றுப்படை. தமிழ் வாழ்த்து) (நேரிசைவெண்பா) - "தமிழிற் கலைகள் தழைத்திடச் செய்தும் தமிழரெல்லோருந் தமிழை - யமிழ்தாய்க் குழைவொடு கற்றுங் கொடுக்கின் முதன்மை தழைவொடு வாழுந் தமிழ்". . .

வேண்டுகோள் (நிலை மண்டில் வாசிரியம்)

"கன்று தனக்குக் கற்றுக் கொடுப்பா ரென்று மில்லை யீன்றது மான்பாற் சென்று தேடிச் செம்பா லருந்தும். தமிழர் பலர்க்குத் தமிழ்மொழி கற்பீர் 5 அமிழ்த மருந்தின ராவீ ரென்று பன்முறை கதறினும் பாரார் திரும்பி".


குறிப்புரை: தமிழ் வாழ்த்து- ஒருவனுக்குப் பணங்கிடைக்க வேண்டும்' என்று வாழ்த்த விரும்பினால் அப்படி வாழ்த்தாமல், அவனை நோக்கி, நீ தொழில் செய்க என்று தூண்டுவதுதானே, அவனுக்குப் பணங் கிடைக்க வாழ்த்தியதாகும். அதுபோல, தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என்று மட்டும் வாயால் வாழ்த்திக்கொண் டேயிராமல், தமிழ் வளர்வதற்குக் காரணங்களான(1) தமிழில் விஞ்ஞானம், பொருளாதாரம் முதலிய பல துறைகளையும் கொண்டுவந்துமொழியை விரிவுசெய்தல்(2) ப்லரும் தமிழை நன்றாகப் படித்துத் தேர்ச்சிபெறல்(8) இரண்டுஞ் செய்ததனோடமையாது, தமிழ்நாட்டில் எல்லாத் துறைகளிலும் தமிழ்க்கே முதன்மையளித்தல் என்னும் மூன்றினையும் முயன்று செய்தால் தமிழ் தானே வளருமன்றோ?

வேண்டுகோள் - 1-6- அஃறிணைப் பொருளா கிய கன்று கூட பிறந்தவுடனே தானே தாய் மடியைத் தேடிப் பாலுண்டு மகிழ்கின்றது. உயர் திணைப் பொருளா


நன்முறை யாமோ நாட்டுனீரே! தமிழனொருவன் றன்னோ ரன்ன தமிழனொருவனைத் தமிழ்கற்பதற்கா

10 ஆற்றுப் யடுப்பதை யறியின் மற்றையோர் தூற்றி, நகைப்பர் துப்பிலாத் 'தமிழன். அதனான் . நன்ன ரனைவரும் நந்தமிழ் கற்றே என்னூல்_தேவை யிலாதாக்க வேண்டுவல்.விடுதலை பெற்றதும் விடுதலைப் பாடல்

15. "விடுதலை பெற்று

விடுதலைப் போன்றே. ஆயினும் பின்னூற் றாண்டில் பிறங்கு மக்கட் கிந்நூற்றாண்டை யெடுதாது விளக்கும் ருண்டை யெடுத்து விளக்கும் அந்நூ லாமிவ் வாற்றுப் படையே". 

கிய தமிழர் பலர். எவ்வளவு தூண்டியும் அமிழ்தத் தமிழை யருந்தாமல் காலத்தைக் கொல்கின்றனர்.

13—16- தமிழ் கற்காத பெரும்பான்மையான தமிழரை தமிழ்கற்று அதற்கு முதன்மையளிக்க வேண்டுமென்று தூண்டுகின்ற இந்நூல் எல்லா மக்களும் அங்ஙனம் செய்தபின் தேவையில்லை. அஃதாவது, இந்தியா விடுதலை பெறுவதற்குமுன், 'என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம் 'என்று பாடிய விடுதலைப்பாடல் விடுதலை பெற்றுள்ள இப்போது தேவையில்லையன்றோ!இதுபோலவே அஃதும்.

14–15–நாடு விடுதலை பெற்றதும் விடுதலைப்பாடல் , பாடப்படுவதிலிருந்து விடுதலைப் பெற்றுவிடுவதைப்போல இங்கு விடுதலை என்னும் ஒரேசொல் ஒரே பொருளில் பின்பின் தொடர்ந்து வருதலின் இது சொல்பொருள் பின் வருநிலையணி எனப்படும்.

16-18 இந்நூற்றாண்டின் வரலாற்றைப் பின்னூற்றாண்டினர் அறிவதற்கு உதவும் இந்நூல்.