பக்கம்:செந்தமிழ் ஆற்றுப் படை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

– 6 —

கூத்தர், பாணர்,பொருநர் ,விறலி யென்னும்  நால் வகையா ரிடத்தேயே ஒருவரை யொருவர்

ஆற்றுப் படுக்கும் வழக்கம் இருந்தது என்பது மேற்கூறியவாற்றான் புலப்படுகிறது அங்ஙனமாயின், இந்நால்வ ரல்லாத பிறதிறத்தார் ஆற்றுப்படுத்த லாகாதோ என்ற வினாவிற்கு விடைவேண்டும். தொல்காப்பியர் காலத்தில் இந்நால்லரே

அரசர்களிடமும்,வள்ளல்களிடமும் 

தாமறிந்த கஸைகளைக் காண்பித்து பரிசு பெற்று வந்திருக்கலாம் ஆதலின் அவர்கள் குறுகிய மனப்பான்மையின்றி தாம் பெற்ற வின்பத்தைத் தம்மைச் சார்ந்தோரும் பெற வேண்டும் என்னும் பரந்த நோக்கங்கொண்டு ஒருவரை யொருவர் ஆற்றுப்படுத்தி வந்திருக்கலாம்.அதனையுணர்ந்த

தொல்காப்பியர், "இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்" என்ற நியதிப்படி ஆற்றுப்படை

இலக்கணம் அமைத்திருக்கலாம். அது அக்கால நாட்டுநிலை. மக்கள் நிலை எக் காலத்தும் ஒரே நிலையில் இராதன்றோ ?நாளாவட்டத்தில் பிற்காலத்தில் வேறுசில தேவைகளைக் குறித்து வேறுசிலரும் இத்துறையில் ஈடுபடலாமன்றோ!எடுத்துக்காட்டாக திருமுருகாற்றுப்படையையே எடுத்துக்கொள்வோம். ஓரன்பன் மற்றோரன்பனை முருகப்பெருமானிடத்தில் ஆற்றுப்படுத்ததாக நக்கீரனால் பாடப்பட்டநூல் அது. காலவாழியுருள யுருள திருத்தணிகையாற்றுப்படை, திருப்பாணாற்றுப்படைபோன்ற சிலவும் தோன்றின. சங்க இலக்கியங்களாகிய பதிற்றுப்பத்து, புறநானூறு போன்ற நூற்களிலும் ஆற்றுப்படைக் கருத்தமைந்த தனிச் செய்யுட்கள் உண்டு .ஆயினும் பத்துப்பாட்டுள் உள்ள ஐந்து ஆற்றுப்படை 'நூற்களே பெருவாரியாக மக்களால் அறியப்பட்டு வரு கின்றன. அவற்றைப்பற்றிச் சிறு குறிப்புக்கள் வருமாறு.

"1 திருமுருகாற்றுப்படை. இது 817 அடிக் களை யுடையது. ஓரன்பன் மற்றோரன்பனை முருகக்கடவுளி டத்தே ஆற்றுப்படுத்தியதாக நக்கீரர் என்னும் புலவ ரால் பாடப்பட்ட இந்நூலைப் புலவராற்றுப்படை என் றும் வழங்குப. - - - - -

2. பொருநராற்றுப்படை. இது 248 அடிகளையுடை யது. ஒருபொருநன் மற்றொரு பொருனனை, மன்னன் கரி காற் பெருவளத்தானிடத்தே ஆற்றுப்படுத்தியதாக முடத்தாமக் கண்ணியாரால் பாடப்பட்டது.

3. சிறுபாணாற்றுப்படை: இது 269 அடிகளையுடை யது. ஒரு பாணன் மற்றொரு பாணனை, மன்னன் நல்லியக் கோடனிடத்தில் ஆற்றுப்படுத்தியதாக, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரால் பாடப்பட்டது.

4. பெரும்பாணாற்றுப்படை: இது 500 அடிகளை யுடையது, ஒருபாணன் மற்றொரு பாணனை தொண்டை மான் இளந்திரையனிடத்தே ஆற்றுப்படுத்தியதாக, கடி யலூர் உருத்திரங் கண்ணனாராற் பாடப்பட்டது. சிறு பாணாற்றுப் படையினும் மிக்க அடிகளையுடையதாதலின் இது பெரும்பாணாற்றுப்படை யெனப்பட்டது.

5. கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) இது 588 அடிகளையுடையது. ஒரு கூத்தன் மற்றொரு கூத்தனை, நன்னனிடத்தில் ஆற்றுப்படுத்தியதாக, இரணிய முட் டத்துப் பெருங் குன்றூர்ப் பெருங் கெளசிகனாராற் பாடப்