பக்கம்:செந்தமிழ் ஆற்றுப் படை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

— 8 — பட்டது. இதனை மலைபடுகடாம் என்ற பெயராலேயே அழைத்து வருகின்றனர் அறிஞர். . . . . . . மேற்காட்டப்பட்ட ஐந்தனையும் இருவகையாகப் பிரிக்கலாம். யாரிடம் ஆற்றுப்படுத்தினரோ அவர் பெய ரால் அமைந்தது திருமுருகாற்றுப்படை. யாரை ஆற்றுப்படுத்தினரோ அவர் பெயரால் அமைந்தவை பின்னைய நான்கும். இவ்விருவகைகளையும் சேர்ந்ததன்று இச்செந்தமிழாற்றுப்படை, இரண்டு மமைந்த மூன்றாம் வகையாக மொழியலாம் இதனை. எவ்விதம்? செந்தமிழாற்றுப்ப்டை யென்பது-தமிழ் கற்ற ஒரு தமிழன், தமிழ் கற்காத மற்றொரு தமிழனை, தமிழ் கற்றுத் தாய்நாட்டிற்குத் தொண்டு புரிவதற்காகத் தமிழ்த்தாயிடம் ஆற்றுப்படுப்பதாகும். அஃதாவது-எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருக்குந் தாயிடஞ் செல்லாக் குழந்தையைத் தாண்டித் தாயிடம் அனுப்பும் விந்தை யாகும். இங்கே ஆற்றுப்படுப்பதும் தமிழனே ஆற்றுப் படுக்கும் இடமும் தமிழ்த்தாய். எனவே, தமிழர், தமிழ்த் தாய் என்ற இரண்டி ற்கும் பொதுவாகத் தமிழாற்றுப் படையென்னும் பெயர் அமைந்துள்ள தன்றோ! (பாண் என்பது பாணரைக் குறிப்பது போல், தமிழ் என்பதும் தமிழரைக் குறிக்கும்) - இந்நூலுள். பிறமொழி, பிறமொழியினர், பிறநாடு என்பவற்றினின்றும், தமிழ்மொழி, தமிழர், தமிழ் நிலம் என்பவை தனித்துப் பிரிக்கப்பட்டு விதந்து பேசப்பட் டுள்ளன. ஏனிந்தக் குறுகிய நோக்கம்? என்று வினவ லாம் சிலர். சிறு பிரிவுக்கும் இடமின்றி, உலக முழுவதும் ஒருநாடாய், ஒருதலைவனுக்குட்பட்ட ஆட்சியாய், மக்க ளனைவரும் ஓரினத்தராய், உலகத்தின் குடி (பிரஜை) — 9 — என்று சொல்லிக்கொள்ளும் பெருமைக்குரிய நிலை வர வேண்டும் என்ற விருப்பம் அடியேனுக்கும் உண்டு. ஆனால் ஆங்கில உலகில் என்றும் வரவே வராது என்பது திண் ணம் என்ற நம்பிக்கையும் ஒரு பக்கம் உண்டு. ஏன்? பாட்டன், தகப்பன் ஈட்டிவைத்துள்ள சொத்துக்கள் தன் தம்பிக்குக் கிடைக்கப் பெறாமல், குடும்பத்தில் மூத் தவனாகிய தனக்கே கிடைத்துவிடக் கூடாதா என்று எண்ணமிடுகிறான் அண்ணன். தகப்பனும், பிள்ளை கட்கு எழுத்துமூலமாகச் சொத்துரிமை வழங்கும்போது, பிள் ளைகள் சொத்தை உரிமையாக்கிக்கொண்ட பிறகு தன் னைக் காப்பார்களோ, மாட்டார்களோ என்றையுற்று, தன் பெயருக்கென ஒருபகுதியை ஒதுக்கிக் கொள் கிறான். மைந்தனும், தந்தை எப்போது தொலைவான், தொலைந்தால் விருப்பம்போல் சொத்தைக் கையாளலாமே என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறான். மன்னன் ஷாஜஹானை (ழ்சாசஃ ஆனை) அமுக்கிவிட்டு, அவன் மகன் ஒளரங்கசீப் அரசைப் பறித்துக்கொண்டது உலக வரலாறன்றோ? இத்தகைய வஞ்சகவுலகில் பிறரை எப்படி நம்புவது? நம்பியவரையுந்தான் போதாதோ? அதனாலேயே, துப் பாக்கியுரிமை வைத்திருப்பவரைப்போல, தமிழன் தற் காப்புக்காகத் தமிழ்மொழியினையும், தமிழ் நிலத்தினையும் காத்துக்கொள்ளவேண்டியது கடமை என்பதைப் பலபட விரித்து வற்புறுத்துகின்றது. இந்நூல். இக் கருத்தை மறுப்பவர் பிறராயின், அவர் மறுப்பில் பொரு ளுண்டு என்று வரவேற்பேன். மறுப்பவர்_தமிழராயின், அவர் அடியேனை நன் றாகப் புரிந்து கொள்ளவில்லை யென்று அவர்மேல் இரக்கப்பட்டு அமைதியுறுவேன். வணக்கம்

பைந்தமிழ்ப் பதிப்பகம் _ புதுச்சேரி 1-5-51

சுந்தா-சண்முகன்.