பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தமிழ் அகரமுதலி வரலாறு மனப்பாடம் செய்வதே நோக்கமாக இருந்தமையாலும், எளிய முறையில் அனைவரும் ஒப்பு நோக்கும் அகராதி நூல்களின் தேவை காலப்போக்கில் எழுந்தது. அதன் தொடர்ச்சியே அகராதிகளின் வளர்ச்சிக்குக் கால்கோளாக அமைந்தது. சதுரகராதியின் தோற்றம் தமிழ் அகராதி வரலாற்றில் அகர நிரற் கோட்பாட்டிளை முழுமையாகக் கடைப்பிடித்தும், செய்யுள் நடையை முற்றிலும் நீக்கியும், கடினமான மிகப் பழஞ்சொற்களைக் கைவிட்டும், எளிய சொற்களைக் கையாண்டும் 1732 இல் வெளிவந்த வீரமாமுனிவரின் சதுரகராதி முதன்மையானதாகும். மனனம் செய்யும் நிகண்டுகளின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து அகா நிரற்படி அகராதிக்கலை வளர்ச்சியடைவதற்கு வித்திட்ட முதல் அகராதியாளர் என்ற பெருமையும் இந்நாலாசிரியருக்கு உண்டு. தமிழ் - ஆங்கில அகராதி தென்ன சத்துக் கிறித்தவத் திருச்சபை பயினருக்கும், வணிகர்களுக்கும் உதவும் நோக்கில் கி. 1739 இல் முதல் தமிழ்-ஆங்கில அகராதி வெளிவந்தது. சாம் பிலிப்பெப்ரீ சியசும் (Joham phi!ip), சான் கிருத்தியன் பெரதாப்டும் (John christian Brethaup!) இணைந்து உருவாக்கிய இவ்வகராதியே பல அறிஞர்களை அகாராதித் துறையில் ஈடுபடச் செய்தது; கி.பி.1830 இல் இராட்லெர் (Rottier) தமிழ் ஆங்கில அகராதியைத் தொகுத்தளித்தார். இவ்வகராதிக்குப் ஃபில்:வர் வின் சுலோவின் அமெரிக்கத் திருச்சபைப் போசராதி. கி.பி 1842 இல் வெளிய ட்பட்டது. தமிழ் ஆங்கிலச் சுருக்க அகராதி கையடக்க அகராதிகளின் மீது மக்கள் காட்டிய ஈடுபாட்டினை நிறைவேற்றும் நோக்கத்தோடு அறிஞர் போப்பு (Pope) அவர்களால் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்- தமிழ்ச் சொல்லடைவுகள் வெளிவந்தன. இச்சொல் லடைவுகளைப் புதுக்கியும், விரித்தும் தமிழ் - ஆங்கிலச் சுருக்க அகராதி கி.பி.1870 இல் வெளியிடப்பட்டது. இது வடமொழி அரபிச் சொற்கள், வினையின் வேர்ச்சொல்லமைப்பு ஆகியவற்றைத் தனித்துக் காட்டுவதாகவும், மாணவர்களின் பயன்பாட்டிற் குரியதாகவும் இருந்தது. இவ்வாறு வெளியிடப்பட்ட இருமொழி அகராதிகளால் ஒருமொழி அகராதிகளின் வளர்ச்சி குறைந்தது. நா. கதிர்வேற்பிள்ளை அகராதி மருத்துவம், நிலைத்திணை இயல், இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள சொல்லாட்சிகள் என்றெல்லாம் பெருமுயற்சி மேற்கொண்டு சொற்களைத் தொகுத்தளித்த நா. கதிர்வேற்பிள்ளை, அகராதியில் சொற்களின் எண்ணிக்கையை அதிகமாக்கவேண்டும் என்னும் வேட்கையில் வடமொழிச் சொற்களை வரையறையின்றிச் சேர்த்திருந்தாலும், பொருள் விளக்கத்திற்குச் சிறந்த நூல்களில் இருந்து மேற்கோள்களை நன்கு எடுத்தாண்டுள்ளார். வடமொழிப் பொருள் மூலத்தையும், பொருள் கூறுவதில் அகரநிரல் அமைப்பு, சொற்பிறப்பு நெறி முறை ஆகியவற்றை ஆங்காங்கே எடுத்தாண்டுள்ள சிறப்புக்குரிய இவ்வகரமுதலி மதுரைத் தமிழ் சங்கத்தால் மூன்றுத் தொகுதிகளாக, ஏறத்தாழ 63.900 சொற்களைக் கொண்டதாக 1910 இல் வெளியிடப்பட்டது. அகராதிகளின் வளர்ச்சி சென்னைப் பல்கலைக் கழகமும், சென்னை மாநில அரசும் ஒரு முதல் தர அகராதியை வெளிக்கொணரவும், தெளிந்த நல்லகராதிகளை உருவாக்கவும் திட்டமிட்டுக் குறிப்பிட்ட நெறிமுறைகளில் பொருள் கூறி, இதுவரை வெளிவந்த அகராதிகள் புறக்கணித்த சொற்பிறப்புக்கு உரிய இடம் நல்கித், தமிழ்ச் சொற்களின் சொற்பிறப்பைக் கண்டறிந்து, தக்க மேற்கோள்கள் விளங்க ஒரு பேரகராதியை உருவாக்க எடுத்துக்கொண்ட முனைப்பால் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி தொகுக்கும் பணி தொடங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரடரிக் நிக்கல்சனால் வின்கலோ தமிழ் ஆங்கில அகராதி இலக்கியச் சொற்கள், பொதுமக்கள் வழக்குச் சொற்கள், அறிவி.பல் துறை சார்ந்த சொற்கள், கணியம், தொன்பம் எனப் பல்துறைச் சொற்களை ாம் உள்ளடக்கமாகக் சொகண்டு தொகுக்கப்பட்ட பேரகராதிர்பாக, வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி கி.பி 1862 இல் ஏறத்தாழ 67.000 சொற்களுடன் வெளிவந்தது. வினைச் சொற்களின் வேர்ச்சொல் வடிவை முதன் முதலில் தந்துள்ள பெருமைக்கும், தமிழ்ச் சொற்களில் இருந்து வடசொற்களை உடுக்குறி தந்து பிரித்துக்காட்டும் அகராதி நெறிமுறையைக் கைஃபாண்ட சிறப்புக்கும் உரியது இவ்வகராதியே எனலாம்.