பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை {Frederik Nicholson) உருப்பெற்றது. வின்சுலோ, போப், உ.வே.சா. ஆகியோர் திரட்டிய சொற்கள் மற்றும் பல்துறை அறிஞர் பெருமக்கள் திரட்டிய சொற்றொகுப்புகளைக் கொண்டு நல்லதொரு பேரகராதியைப் புதுக்கியும், விரிவான முறையிலும் வெளியிடத் திட்டமிடப்பட்டுப் பணி தொடங்கப்பட்டது. பொருள் விளக்கம், மேற்கோள்கள், வேர்ச்சொல் குறித்தல் போன்ற அகராதி நெறிமுறையுடன் கூடிய போகராதி பேரா. வையாபுரிப்பிள்ளை அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, 1926 இல் உருவாக்கப்பட்டது. இவ்வகராதி சில குறைபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் இன்றுள்ள தமிழ் அகராதிகளில் விளக்கமான பேரகராதியாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. ஒரு மொழி அகராதிகளின் தோற்றம் தமிழ்க்கல்வி ஆர்வம் மக்களிடம் பெருகவும், தமிழ்ச் சொற்களுக்குத் தமிழில் பொருள் கூறும் தேவையை விளக்கிடவும் ஒரு மொழி அகராதிகள் உருவாக்கம் பெறத் தொடங்கின. அவ்வகையில் 'தமிழ்மொழி அகராதி பேரா. கா.நமச்சிவாயரால் 1918 இல் தொகுத்து வெளியிடப்பட்டது. திரு. பவானந்தம் தொகுத்தளித்த 'தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி' 1925 இல் 33,000 சொற்களுடன் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து திரு.அனவரத விநாயகரின் 'மாணவர் தமிழ் அகராதி' 1921 இல் 26,000 சொற்களோடும், திரு.மே.வீ.வேணுகோபாலர் தொகுத்தளித்த 'இளைஞர் தமிழ்க் கையகராதி', விக்டோரியா தமிழ் அகராதி (1934), ஆனந்த விகடன் அகராதி (1935), கிருட்டிணசாமியின் 'நவீன தமிழ் அகராதி' ஆகியவை தமிழ்க் கல்வி ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் தொகுத்து வெளியிடப்பட்டன. (1979), தமிழக அரசின் வெளியீடான தமிழ் - தமிழ் அகராதி (1985) ஆகியவை சிறப்புக்குரிய குழு அகராதிகளாகும். அருங்கலைச் சொல் அகரமுதலி இன்றைய அறிவியல் சார்ந்த பல்துறைக் கலைச் சொற்களுக்கு ஏற்ற தூயதமிழ்ச் சொற்களைத் தமிழ் இலக்கண இலக்கியங்களிலிருந்தும் மக்கள் வழக்காற்றிலிருந்தும் தெரிந்தெடுத்தும், ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு இணையான தூயதமிழ்ச் சொற்களை வேர்ச்சொல் அடிப்படையில் புனைந் தமைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது அருங்கலைச் சொல் பேரகரமுதலி. ஆய்வறிஞர் ப அருளி அவர்களை முதன்மைப் பதிப்பாசிரியராகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இவ்வகரமுதலியில் நூற்று முப்பத்தைந்து துறைகளைச் சார்ந்த கலைச்சொற்கள் இடம்பெற்றுள்ளன. கழகக் காலம் முதல் இன்று வரையுள்ள இலக்கிய வழக்குகளையும், வட்டார வழக்குகளையும், பல்வேறு துறை அறிஞர் பெருமக்களின் ஒத்துழைப்போடு இலங்கை, மலேயா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் சொல்லாட்சிகளையும் கொண்டு தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் பெருஞ்சொல் அகராதி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இருமொழி அகராதிகளின் தோற்றம் ஐரோப்பியர்களின் இந்திய வருகையால் ஐரோப்பிய மொழிகள், கிழக்காசிய மேற்காசிய மொழிகள், இந்திய மொழிகள் ஆகியவற்றில் பொருள் விளக்கம் காணும் தேவையைக் கருத்திற் கொண்டு, அம்மொழிகளின் துணையுடன் தமிழகராதிகள் பல வெளிவந்தன. குறிப்பாக, ஆங்கில ஆட்சி தமிழகத்தில் நிலைத்திருந்ததால் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் அகராதிகள் மிகுதியாக வெளிவந்தன. கையகராதிகளின் வளர்ச்சி சுருக்கமாகவும், விரைந்தும் பொருள் காணும் நோக்கத்தில் 'கழகத் தமிழ் கையகராதி' 1940 இல் வெளிவந்தது. இது மாணவரிடையே பெரிதும் ஆளுமை பெற்ற அகராதியாகும். சென்னைப் பல்கலைக் கழகத்தின் 'கருக்கத் தமிழ் அகராதி', 'கோனார் தமிழ்க் கையகராதி' ஆகியவை 1955 இல் வெளிவந்தன. அவற்றில் கோனார் தமிழ்க் கையகராதி மாணவரிடையே மிகுந்த வரவேற்புப் பெற்றது. தனியொருவர் திரட்டித் தந்த அகராதிகளைக் காட்டிலும், குழு அகராதிகள் பின்னர்ச் சாய்கால் பெறத் தொடங்கின. அவற்றில் கழகப் புலவர் குழு திரட்டிய கழகத் தமிழகராதி' (1964), லிப்கோ நிறுவனத்தினர் வெளியிட்ட அகராதிகள், 'மணிமேகலைத் தமிழகராதி' தமிழ் ஆங்கில அகராதிகள் ஐரோப்பிய அறிஞர்களின் பெருமுயற்சியால் தமிழ்-ஆங்கில அகராதிகள் தொகுக்கப்பட்டன. இராட்லெரின் 'தமிழ்-ஆங்கில அகராதி' 1834-1841 இல் வெளியிடப்பட்டது. இதன் பின்னர் வின்சுலோவின் தமிழ்-ஆங்கில அகராதி மக்கள் வழக்குச் சொற்களையும் சேர்த்து வெளியிட்டுப் பெருவழக்குப் பெற்றது. பெட்ரீசியசின் இருமொழி அகராதி 1897-இலும், தமிழ்