பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் ன்னுரை 5 பன்மொழி அகராதிகள் ஒரு மொழியினர் மற்றைப் பகுதி மக்களை அவர்களின் மொழி வாயிலாக அறியவும் அதனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் ஏதுவாகத் தமிழில் பன்மொழி அகராதிகள் வெளிவந்துள்ளன. தமிழ் - ஆங்கிலம்-செர்மன் (1869), ஆங்கிலம் - மலாய் - சீனம் - தமிழ் (1824), தமிழ் - இந்துத்தானி - பர்மீயம் - ஆங்கிலம் (1886), இந்தி - மராத்தி - தெலுங்கு - தமிழ் (1964) கன்னடம் - தெலுங்கு - தமிழ் - ஆங்கிலம் இந்துத்தானி (1891) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பொதுவாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அகராதிகளாகத் தொகுக்கப்பட்டு அச்சில் வெளிவராத நூல்கள் சென்னை உ.வே.சா. நூலகத்தில் உள்ளன. அவற்றுள், அகநானூறு அகராதி, தலக் குறிப்புகள், திருக்குறள் பரிமேலழகர் அரும்பத அகராதி. தேவார அருந் தொடகராதி, வாகட அகராதி போன்றவை குறிப்பிடத்தக்கன. ஆங்கில அகராதியின் தோற்றம் ஆங்கிலேய மேலாண்மை மற்றும் வணிகத் தொடர்பு கரணியமாக இருமொழிச் சொற்றொகையாக 1840 இல் காச்சுடன் (Caxton) என்பவரால் வெளிவந்தது. பால்சுகிரேவின் (Palsgrave) இன ஆங்கிலம் - பிரெஞ்சு சொற்றொகை 1830-இல் வெளிவந்து சிறப்பு வாய்ந்ததாக விளங்கியது. 1573 இல் ஆங்கிலம் - இலத்தீன் - பிரெஞ்சு ஆகிய மும்மொழி அகராதியை சான்பேரெடு {John Baret) தொகுத்தளித்தார். 1746 இல் சாமுவேல் சான்சன் (Samuel Johnson) தொகுத்து வெளியிட்ட ஆங்கில அகராதியே சிறந்த வழிகாட்டி அகராதியாக சிறப்புற்று விளங்குகிறது. இந்த அகராதி 1,18,000 மேற்கோள்கள்களையும், பரந்த பொருளையும் தொகுத்துள்ளது. இதன் பின்னர் கொலம்பியா அகராதி 1800 இல் வந்தது. நோவாவெபுசடர் 1823 இல் மிகப்பெரிய அமெரிக்க அகராதியை அளித்தார். சொற்றொகுப்பும், பொருள் விளக்கமும் இதன் சிறப்பை நிலைநாட்டின. ஆக்ககபோர்டு ஆங்கிலச் சொற்பிறப்பு அகராதி ஆனியன்சாதல் என்பவரால் 1966 இல் வெளிவந்தது. ஆங்கில மொழிச் சொற்பிறப்பு விளக்க அகராதி 1967 இல் வெளிவந்து ஆங்கில மொழிக்கு ஆக்கம் தந்தது. மேலைநாட்டு மொழிகளில் எழுதப்பட்ட சொற்பிறப்பியல் அகராதிகளின் தோற்றம், தமிழில் ஆங்கிலம், வடமொழி இன்னும் பல மொழிச் சொற்கலப்பு ஆகியவற்றால் தமிழ்மொழி மறைந்தொழிந்து வளமை குன்றிவிடும் என்று மனம் வெதும்பிய தமிழ்ச்சான்றோர் பலருள் மொழிஞாயிறு பாவாணரின் உள்ளத்தில் பண்டைய தமிழ் இலக்கண நூலாம் தொல்காப்பியமும், சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி தோற்றமும் புலப்படுத்திய சொற்பிறப்பியல் நெறிமுறையால் அன்னைத் தமிழுக்குச் சொற்பிறப்பியல் அகரமுதலி உருவாக்க வேண்டுமென்ற வேணவா 2-ருப்பெற்றது. தொல்பழங்கால அகராதி வளர்ச்சி கிரேக்கர்களிடையே அகராதி மரபு பண்டைய காலத்திலேயே உருவாகியிருந்தது. கி.மு.முதல் நூற்றாண்டில் எழுந்த வாரோ {Varro) எழுதிய புத்தகத்தில் சொற்பிறப்புக்கு மேற்கோள் காட்டியதும், மெசபடோமியாவில் கி.மு.ஏழாம் நூற்றாண்டில் அக்காடியன் (Akkadian) சொற்களின் சிறுபட்டியல் கிடைத்ததும் கிரேக்கர்களின் மரபு வழி அகராதி நிலையை மெய்ப்பிக்கின்றன. கி.பி. முதல் நூற்றாண்டில் அலெக்சாண்டிரியா பாம்பிலசு (Pamphilus) கிரேக்க அகராதியை உருவாக்கினார். இரண்டாம் நூற்றாண்டில் அட்டிசிகட்டு களின் (Atticists) அகராதிகள் சிறப்பாக உருவாயின. அகராதியைக் குறிக்க 'காலெபின்' (Calepin) என்ற சொல் வழங்கியது. மக்கள் தங்கள் உடைமைப் பொருளில் மதிப்புடையதாக, அகராதியைக் கருதித் தம் தலைமுறையினர்க்குச் செல்வமாக விட்டுச் சென்றனர். பள்ளிகளில் மாணவர் அறிவைப் பெருக்க அகராதிகள் இருக்க வேண்டும் என்றனர். காலப்போக்கில் இலத்தீன் மொழியைப் பலரும் மதிப்புள்ள மொழியாகப் பயன்படுத்தினர். அம்மொழி அகராதிகள் ஆங்கில அகராதிகளிடையே தம் ஆளுமையை நிலைநாட்டின. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தோற்றம் உலக அரங்கில் தொன்மையும் வளமையம் மிக்க தொல்காப்பியம், கழக இலக்கியங்கள், திருக்குறள் முதலிய மரபுச் செல்வங்களைப் பெற்ற செவ்வியல் மொழி அன்னைத் தமிழாகும். இந்திய விடுதலை அண்ணல் காந்தியடிகளை முன்நிறுத்துவது போல் செந்தமிழ் விடுதலை செம்மொழிக்