பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தமிழ் அகரமுதலி வரலாறு கூட்டுச் சொற்களை எண்வகையாகப் பகுத்துக் காட்டியுள்ள நெறிமுறை நற்பயன் அளிக்கும் முயற்சியாகும். வினைச்சொற்களை எவலொருமை வடிவில் குறித்திருப்பது சொல்லாக்கத்திற்குத் துணை செய்யும் மரபு நெறியாகும். அயன்மொழிச் சொற்கள் இயன்ற அளவு நெருங்கிய தமிழ் எழுத்துக்களால் குறிக்கப்பெற்றுள்ளமை, பழமரபு காக்கும் நெறிமுறையாகும். மரபுவழக்கைத் தனிச்சொல், இணைச்சொல், கூட்டுச்சொல், தொடர்ச்சொல் என நான்காகப் பிரித்துக் காட்டியிருப்பது சொற்பொருள் காண்பதற்குப் பெரிதும் துணை புரிகிறது. உருத்திரிந்தும் திரியாமலும் உள்ள செந்தமிழ் சொற்களின் முந்து தமிழ் வடிவங்களை மீட்டமைக்கச் சொற்பிறப்பியல் அகரமுதலி வித்திடுகிறது. சொற்பிறப்பைச் சொற்றிரிபு, பொருள் திரிபுகளின் வாயிலாக ஏரண நெறி தழுவி வாலாற்று வழி நெடுநோக்குடன், தக்க சான்றுகளுடன் கணித்து வரையறுக்கவும், சான்று கிட்டாதவற்றுக்கு மரபு நோக்கி வடிவ மீட்டமைப்புச் செய்வதற்கும் பாவாணரின் சொற்பிறப்பியல் அகரமுதலி வழிகோலுகிறது. உலக மொழிகளில் பல்வேறு சொற்பிறப்பியல் அகராதிகள் தொகுக்கப்பட்டு மேலைநாட்டு மொழிகளுக்குச் சிறப்புச் சேர்த்த நிலையில், தமிழில் சொற்பிறப்பியல் அகரமுதலி தோன்றவில்லையே என்னும் தமிழ்கூறு நல்லுலக மக்களின் குறையை நிறைவாக்கித் தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டிய பெருமை மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் சொற்பிறப்பியல் அகாமுதலிக்கு உண்டு. சொற்பிறப்பியல் அகரமுதலி திராவிட மொழிகளின் ஆய்வுப் புலங்களுக்கும், தமிழா: ராய்ச்சி வல்லுநர்களுக்கும் ஆற்றுப்படுத்தும் பெருங்கொடையாக அமைவது தின்ணம் என்று இங்கிலாந்து நாட்டு அகராதி வல்லுநர் பரோ பாராட்டியிருப்பது சொற்பிறப்பியல் அகரமுதலியின் சீர்மையை விளக்குகிறது. மேனாட்டு அகராதி வல்லுநர்கள் அகரமுதலியின் பயன்பாட்டைக் காஞ்சியப் பயன்பாடு {Store Fouse function of a Dictionary), முறை மன்றப் பயன்பாடு (Court - function of a Dictionary) என்று இருவகை நோக்கம் கருதிப் பாகுபடுத்துவர். ஆனால், சொற்பிறப்பியல் அகரமுதலி இவ்விரு நோக்கங்களையும் உள்ளடக்கிய சிறப்புக் கொண்டது. தமிழ் வேர்ப்பொருள் காட்டும் மொழி எனத் தொல்காப்பியச் சான்று காட்டித் தமிழின் தனித்தன்மை சொற்பிறப்பியல் அகரமுதலியில் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்ச் சொல்லின் வளம் அறிதற்குத் தமிழ்ச் சொற்களும், அயற்சொற்களும் முதன்முதலாகப் பிரித்துக் காட்டப்பட்டுள்ள நெறிமுறை பாராட்டுக்குரியதாக உள்ளது. உலக மொழிகளில் வெளிவந்துள்ள சொற்பிறப்பு அகராதிகளைக் காணும் போது, உலகில் முதன் முறையாக வரலாற்று அடிப்படையிலும், மொழிநூலடிப் படையிலும் வெளிவந்துள்ள மொழிஞாயிறு பாவாணரின் சொற்பிறப்பியல் அகரமுதலியே தனித்தன்மையும், சிறப்பும் ஒருங்கே பெற்ற பெருமைக்குரியது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணக் கல்வி ஓரளவே வளர்ந்துள்ளதால் இத்தகைய அகராதிகளின் தோற்றம் மேலை நாட்டு மொழி ஆய்வாளர்களுக்கும், வருங்காலத் தமிழாய்வறிஞர்களுக்கும் துணைபுரியும் என்பது வெள்ளிடைமலை. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் தோற்றத்தால், மற்ற திராவிட மொழிகளில் சொற்பிறப்பகராதிகள் தோன்றவும், வழியுண்டாகும் என்பது திண்ணம். தொல்காப்பியம் தமிழின் இலக்கண வளமைக்கு அடையாளம். திருக்குறள் தமிழினத்தின் வாழ்வியல் சிறப்பிற்கு அடையாளம். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி உலக மொழிகளுக்குத் தாய்மொழி தமிழே எனப் புலப்படுத்தும் அடையாளம். பிற அகராதிகளில் இடம்பெறாத உலக வழக்குச் சொற்களைப் பாவாணரின் சொற்பிறப்பியல் அகாமுதலி தரற்றுக் கொண்டுள்ள பாங்கு போற்றற்குரியது.