பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரமுதலிக் கோட்பாடு “அகரமுதலியைப் பயன்படுத்துவோர் தம் பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் பாங்கில் அகரமுதலிகள் அமைகின்றன. அவற்றுள் செய்திகள் அடங்கிய சரக்கறை (store house function) ஆகவும் நெறிகள் நல்கும் முறை மன்றம் (court house function) ஆகவும் செயற்படும் தன்மைகளை முதன்மையாகக் குறிப்பிடுவர். பலுக்கும் முறை, சொற்பிறப்பு, வழக்குப் போன்ற செய்திகளைத் தரும் பார்வைப் பொத்தகமாக விளங்குவது சரக்கறையாகச் செயற்படும் தன்மையாகும். நல்ல அல்லது சரியான வழக்கைத் தீய அல்லது தவற்று வழக்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பார்வைப் பொத்தகமாக விளங்குவது நெறிநல்கும் முறைமன்றச் செயற்பாடாகும். இவ்விரண்டு நிலைகளிலும் செய்திகளைத் தெளிவுபடுத்தும் தன்மையனவாக அகரமுதலிகள் விளங்க வேண்டும். இத்தன்மை போதிய அளவு அகரமுதலியில் இடம்பெற வேண்டும் என்றால் அகரமுதலித் தொகுப்புப் பல நிலைகளிலிருந்து தொகுக்கப்பட வேண்டும். அவை உரியனவாகவும் எளிமையாகச் சரிபார்க்கத் தக்கனவாகவும் இருக்க வேண்டும்" (Ram Adhar Singh 1982 4) இன்றைய மொழியியலாளர்கள் மொழிப் பயன்பாட்டில் உள்ளன உள்ளபடியே அகரமுதலியில் இடம்பெற வேண்டும் எனக் கருதுகின்றனர். ஆனால் அகரமுதலியைப் பயன்படுத்துவோர் பலர் மொழிப் பயன்பாட்டிலுள்ள கூறுகளின் விளக்கமாக அகர முதலியைக் கருதுவது இல்லை. மொழித் தூய்மையைக் காக்கும் வகையில் அகரமுதலி அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். இவ்வகையில் அகரமுதலிப் பதிப்பாசிரியர் சொற்களை ஏற்க அல்லது தவிர்க்க உரியவராவார் என்றும் அகரமுதலியில் இடம் பெறுவத னாலேயே சொல் உரிய நிலையைப் பெறுகிறது என்றும் கருதுகின்றனர் (Encyclopeadia Americana Vol IX. 85). பயன்பாடு : ஒரு மொழியைக் கற்பதற்கு அகரமுதலி மிகப்பெரும் துணை புரிகிறது. அதனால்தான் முன்னர் அகரமுதலியை (நிகண்டு போன்றவற்றை) மனப்பாடம் செய்வதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு செய்வதால் ஒருவரது மொழியறிவு அதிக அளவில் பெருகும் என்று நம்பப்பட்டு வந்தது, எவ்வாறாயினும் அறிவுப் புலத்தில் அகரமுதலி தனக்கென்று தனியான இடத்தினைக் கொண்டுள்ளது. சிறப்புடன் விளங்கும் மொழி தரமான அகரமுதலியைக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லலாம். தமிழ்மொழியைப் பொறுத்த வரையில் அது பல்வகையான சிறப்புகளுடன் விளங்கி வருகிறது. நீண்ட வரலாற்றினைக் கொண்ட இம்மொழிக்குத் தரமான அகரமுதலிகள் உருவாக்குவது அதன் சிறப்புகளை எடுத்துக்காட்டுவதாக அமையும். இக்கால மொழியியல் அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்படும் அகரமுதலி சிறப்பானது. ஆகையால், உருவாக்கப்படும் அகரமுதலிகள் இக்கால அகராதி நெறிமுறைகளின் படி அமையவேண்டும். அகரமுதலியில் சொற்கள் இடம் பெறுவது அவை கால ஓட்டத்தில் வழக்கிழந்து போவதைப் பெரிதும் தடுக்கும். வழக்கிழந்த சொற்களும் அகரமுதலியில் இடம் பெறச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் பிற்காலத்தில் தேவை ஏற்படும் போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெவ்வேறு மொழி பேசுவோர்களுக்கிடையே தொடர்பு ஏற்படுத்துவதற்குப் பன்மொழி பேசுகின்ற நாட்டில் இருமொழி அகரமுதலி அல்லது பன்மொழி அகரமுதலி துணைபுரியும். நாட்டு ஒருமைப் பாட்டினையும் வலுப்படுத்தும். பிறமொழியாளர் பண்பாட்டை அறிந்து கொள்வதற்கும் அகரமுதலி பெரிதும் துணைபுரியும். ஒரு மொழிக்கு அமையும் தரமான அகாமுதலி அம்மொழியின் சிறப்புகளை வெளிப்படுத்துவதாக இருக்கும். காலந்தோறும் மொழிக்கு அகரமுதலிகள் உருவாக்கப்பட வேண்டும். அது அவ்வக்காலத்தில் மொழிபெற்ற வளர்ச்சிப் பதிவுகளைக் காட்டுவதாக இருக்கும். அது ஒப்பாய்வுக்குப் பெரிதும் துணை புரியும். தமிழுக்குத் தரமான அகரமுதலி உருவாக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டதே செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் பொது வகை அகரமுதலிக் கூறுகள்,