பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரமுதலிக் கோட்பாடு 15 உதவுகிறது'”. ஆகையால் சொற்பிறப்பு அகரமுதலியில் பொருள் தெளிவு சிறப்பாக இருக்கும் என்று நம்பலாம். ஆகுபெயர் "கருத்துகள் பல்கப் பல்கச் சொற்களும் பல்கவேண்டியிருப்பதால், ஒரு மொழி முழு வளர்ச்சி படைவதற்குப் பல்லாயிரக்கணக்கான திரிசொற்கள் தேவையாயுள்ளன. பழஞ்சொல்லினின்று புதுச்சொல் திரிக்க வசதியில்லாவிடத்து ஒரு சொல்லே தொடர்புள்ள பல பொருள்களைக் குறிக்க நேர்கின்றது. இங்ஙனம் பொருள் திரியினும் சொல்திரியாத பெயரே ஆகுபெயர் எனப்படும்” (பாவாணர் 1992 : 86.) எ-டு : கார் என்பது கரு நிறத்தையும், அந்நிறமுடைய மேகத்தையும், மேகத்திலுள்ள நீரையும் மேகம் பெய்யும் காலத்தையும், அக்காலத்தில் விளையும் நெல்லையும் உணர்த்தி நிற்கும். சொற்கள் காரணம் பற்றியும் ஆட்சி பற்றியும் பொருளுணர்த்தும். காரணம் பற்றிப் பொருளுணர்த்து வதே சொல்லுக்குச் சிறப்பாயினும், பொருளுணர்த்துங் குறியே சொல்லாதலின், சிறுபான்மை ஆட்சி பற்றியும் சொல் பொருளுணர்த்துமாறு பயன்படுத்தப் பெறும், அவ்வாட்சியும் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்றவாறு வேறுபடும். ஆட்சிப்பொருள் ஆள்வான் கருத்திற்கேற்ற படியும், ஆளும் சொல் குறிக்கும் பொருளின் நிலைமைக் கேற்றபடியும் 1. உயர்வு, 2. இழிவு, 3. பொது, 4. வரையறுப்பு, 5. விரிப்பு என ஐந்நிலைப்படும். (பாவாணர் 1992 : 86). கட்டுருபன் பெரும்பாலும் அகரமுதலியில் தனியாக இயங்கும் சொற்களே இடம்பெறும். சொற்கள் தனியாக இயங்கும் தன்மையன. ஆனால் கட்டுருபன்கள் தனியான இயங்கும் தன்மை இல்லாதன. அவை பிற உருபன் (சொல்) உடன் சேர்ந்தே மொழியில் ஆளப்படுகின்றன. அவை தனியாக இயங்கும் தன்மை இல்லாதவனவாக இருப்பதால் பல அகரமுதலிகளில் இடம் பெறுவதில்லை. சிறப்பான அகரமுதலிகள் உருபன்கள் அல்லது பொருளுணர்த்தும் வடிவங்கள் அனைத்துக்கும் பொருள் கொடுக்க வேண்டும். ஆகையால் கட்டுருபன்களும் அகரமுதலியில் இடம்பெற வேண்டும். ஆக்க ஈறுகள், பின்னொட்டுகள், முன்னொட்டுகள், இடையொட்டுகள் போன்று கட்டுருபன்களும் அகரமுதலியில் இடம் பெறவேண்டும். பழமையான இலக்கியங்களைக் கொண்டும் இன்றளவில் வழக்கில் இருக்கும் மொழியின் சொற்களை உரிய ஒலிப்பு முறையில் பதிவு செய்ய வேண்டியது தேவை. அம்மொழியின் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரமான ஒலிப்பு வகை பதிவுபெற வேண்டும். சொல்லின் ஒலிப்பு முறை மாறியிருக்கக்கூடும். ஆகையால் இன்று வழக்கில் இருக்கும் ஒலிப்பு முறையை வைத்துப் பழம் இலக்கியச் சொற்களைப் பதிவு செய்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. அதாவது பதிவுமுறை பல நேரங்களில் உரிய ஒலிப்பு முறையைக் காட்டுவதாக இருக்காது. குறிப்பாகப் பிறமொழியாளர்களுக்கு உரிய வகையில் ஒலிப்பு முறைக்கான பதிவு இல்லாமல் போனால் தவறான ஒலிப்புக்கு இட்டுச் செல்லும். இலக்கியங்களில் இடம்பெற்ற சொற்கள் அனைத்தும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலிக்கு எடுத்துக் கொள்ளப்பெறும். ஒரு சொல் ஒரு குறிப்பிட்ட பொருளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றிருந்தால் அவற்றுள் ஏதாவது ஒன்றினை மட்டும் கொள்ளும் முறையைச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி பின்பற்றுகிறது. சொல் குறிக்கும் பொருள் தொடர்பாக உரையாசிரியர்கள் கருத்துகள் மாறியிருக்குமானால் அவை பதிவுக்குக் கொள்ளப்பெறும். இலக்கியத்தில் இடம்பெற்ற அருஞ்சொற்கள் அல்லது விளக்கம் தரவேண்டிய சொற்கள் ஆகியன பற்றி நூல்களிலும் இதழ்களிலும் மலர்களிலும், வந்துள்ள அறிஞர்கள் கட்டுரைகளைப் பொருள் வரையறைக்கும் வேர்விளக்கத்திற்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி பயன்படுத்தியுள்ளது. பொருளியைபுச் சொற்களஞ்சிய (Thesaurus) முறையில் ஒரு சொல் ஒரு பொருளில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இலக்கியங்களில் இடம்பெற்றிருந்தால் அவை அனைத்தையும் தொகுக்க வேண்டும். இம்முறையைச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி மேற்கொள்ள வில்லை. எனினும், பொருள் தெளிவுக்காகச் சில இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மேற்கோள்கள் ஒரே பொருளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. கோட்பாடு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலிக் கோட்பாடு என்பது அகரமுதலிக் கோட்பாடு, சொற்பிறப்பியல் கோட்பாடு இரண்டு ஆகிய 1. Etymology helps give a fuller and clearer understanding of what a word means. It also helps us understand what long and difficult words mean. (The World Book Encyclopaedia, 1980 : Vol vi)