பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரமுதலிக் கோட்பாடு 17 பொதுவாக, அகரமுதலி உருவாக்குவோர் எந்தவகையான பின்னணியுடையோர்க்கு உருவாக்கப் போகிறோம் என்னும் நோக்கத்தை அடிப்படையாக வைத்தே பணி செய்கின்றனர். அகரமுதலித் தொகுப்பு குறிப்பிட்ட நோக்கத்தின் பேரில் அமைகின்றது. ஆகையால் மொழிச்சொற்கள் அனைத்தும் ஒரு மொழியில் தொகுக்கப்படும் அகரமுதலிகள் அனைத்திலும் இடம்பெறும் என்று சொல்லவியலாது. வரலாற்று நோக்கமல்லாமல் வேறு நோக்கத்திற்காகக் தொகுக்கப்படும் அகரமுதலிகளிலிருந்து வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவியலாது. ஒரு சொல்லைப் பற்றிய செய்திகள் அனைத்தையும் கொடுப்பது சிறப்பானது. இக்கால மொழியியல் அடிப்படையில் வரலாற்றுக் கோட்பாடுகளைக் கொண்ட அகரமுதலிகள் சிறப்பானவை என்று கருதப்படுகின்றன. இதில் சொல் பற்றிய செய்திகள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும். சொற்கள் வடிவம் {expression), பொருள் (content) என்னும் இரண்டு தன்மைகளுடன் மொழியில் இயங்குகின்றன. வடிவம் ஒழுங்கு முறையில் அமைந்த அமைப்பினைக் கொண்டது. ஒரு குறிப்பிட்ட வகையான ஒலிச்சேர்க்கையுடன் இருக்கும். அந்தச் சொல்வடிவம் பொருளை உணர்த்தும் திறத்துடன் மொழியில் செயல்படுகிறது. 1. அகரமுதலி, சொல் பற்றிய இன்றைய நாள்வரை கிடைக்கும் செய்திகளைக் கொண்டிருக்க வேண்டும். உள்ளடக்கியதாகவும், 3. செய்திகளுக்கு விரிவான விளக்கங்கள் கொடுக்கப்படுவதாகவும் இருக்கும். கலைக்களஞ்சிய அகரமுதலி என்பது பொதுவகை அகரமுதலி, கலைக்களஞ்சியம் ஆகிய இரண்டும் இணைந்ததாகும். கலைக்களஞ்சியத்தில் இடம் பெறும் செய்திகள் இதில் இடம்பெறும். கொடுக்கப்படும் செய்திகள், செய்திகளைக் கொடுக்கும் வகை ஆகியனவும் அவ்விரண்டின் தன்மைகளைக் கொண்டதாக இருக்கும். உண்மையில் பொருள்வகை அகரமுதலி என்றும் கலைக்களஞ்சிய அகரமுதலி என்றும் பிரிப்பது இயலாது. ஒன்றன் தன்மை மற்றொன்றில் இருந்தே தீரும் என்கின்றனர் (Ram Adhar Singh 1982:13) செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி சொற்பொருள் தருவதும் மொழிச் சார்புடையதுமான மொழியகரமுதலி, மொழியுலகிற்கு அப்பால் உள்ளதும் சொல்லால் சுட்டப்படுவதுமான பொருள் (thing) குறித்துவருவதுமான கலைக்களஞ்சிய அமைப்பு ஆகிய இரண்டு தன்மைகளையும் ஒருங்கே கொண்டது. பொழியகரமுதலி நிலையில் வரலாற்று அகரமுதலி {diachronic), விளக்க அகரமுதலி (synchronic) ஆகிய இரண்டு பண்புகளையும் கொண்டது. சொற்பிறப்பு என்னும் அடிப்படையில் இது சொற்களின் வடிவம், பொருள் ஆகியவற்றின் வளர்ச்சி வரலாறு ஆகியவற்றிற்கு முதன்மை தரும் நிலையது. இயற்பெயர், இடப்பெயர், இலக்கியங்கள், மாந்த அறிவுப்புலத்தின் அனைத்துப் பிரிவுச் செய்திகள், விளக்கமாகச் செய்திகளைத் தருதல் போன்றன கலைக்களஞ்சியச் செய்திகள் எனக் கொள்ளப்படு கின்றன. பொதுப்படையான அகரமுதலித் தன்மையுடன் கலைக்களஞ்சியச் செய்திகளை உள்ளடக்கி வருவது கலைக்களஞ்சிய அகரமுதலி, கலைக்களஞ்சியம் மொழியுலகிற்கு அப்பால் உள்ள கருத்துகளுக்கும் பொருள்களுக்கும் முன்னுரிமை தருகிறது. கலைக்களஞ்சியத்தின் மாந்த அறிவுப் புலத்தில் அனைத்துச் செய்திகளும் இடம்பெறும். இதில் வரலாற்றுக் குறிப்புகள், திணைப்படக் கூறுகள், சிறப்பு வாய்ந்தவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் போன்றனவும் இடம்பெறும். மொழி அகரமுதலி அல்லது பொதுப்படையான அகரமுதலியில் இடம்பெறும் பல உருப்படிகள் கலைக் களஞ்சியத்தில் இடம்பெறா. வரலாற்றுத் தொடர்பான செய்திகள் உருப்படிகளின் விளக்கம் ஆகியன கலைக்களஞ்சியத்தில் இடம்பெறும். 2. அச்செய்திகள் தெளிவாகவும், இயைபுடனும் விளக்கப்படவேண்டும். 3. சிறிய அளவு முயற்சியில் அகரமுதலியைப் பார்ப்பவர்கள்கூட இந்தச் செய்திகளைப் பெறவேண்டும். அகரமுதலி இம்மூன்று தன்மைகளில் எவ்வளவு கவனம் செலுத்துகிறதோ அந்த அளவுக்கு அது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அகரமுதலி பொதுவகை அகரமுதலி என்றும், கலைக்களஞ்சிய அகரமுதலி (Encyciopaedia Dictionary) என்றும் இருவகைப்படும். கலைக்களஞ்சிய அகரமுதலி 1. இயற்பெயர், இடப்பெயர், இலக்கியம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும், 2. அறிவுத் துறையின் அனைத்துப் பிரிவுச் செய்திகளையும்