பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரமுதலிக் கோட்பாடு ஒலிக்குறிப்புச் சொற்கள் போன்றன இங்கு இடம் அளிக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான சொற்களின் பொருள்களைத் தருவதே அகரமுதலியின் அடிப்படைப் பொருண்மையாகும். இதில் கழகக் காலம் முதல் இன்று வரை தமிழில் வழங்கி வரும் சொற்கள் இடம் பெற்றுள்ளன. பழஞ்சொற்கள், புத்தாக்கச் சொற்கள், அரியதாகப் பயன்படுத்தும் சொற்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் சொற்கள், இலக்கியத்தில் மட்டும் இடம் பெற்றுள்ள சொற்கள், பேச்சு வழக்கில் மட்டும் பயன்படுத்தப்படும் சொற்கள் என்று அனைத்து வகைச் சொற்களும் இடம்பெற்றுள்ளன. அறிவியல், விளையாட்டு, தொழில்நுட்பம், அரசியல், மருத்துவம், பொருளியல் என்றாற் போன்ற பலதுறைப்பட்ட சொற்களும் இடம் பெற்றுள்ளன. பிற மொழியிலிருந்து கடன்பெற்ற சொல் தன் வடிவத்தில் மாறிய தன்மையுடன் வழங்கி வாலாம். அவ்வாறான இடங்களில் மூல மொழியின் வடிவத்தையே கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தலாகாது. அது மாறி வழங்கும் வடிவத்தைத்தான் கொடுக்கவேண்டும். பின்னர் வேர் விளக்கம் சொல்லும் போது மூலமொழியின் வடிவத்தைக் காட்டி அதினின்று திரிந்த வடிவம் வழக்குப் பெற்றுள்ளது என்று காட்ட வேண்டும். பிறமொழிச் சொற்களை அகரமுதலி உருப்படிக்குத் தெரிவு செய்யும் போது நுணுகி ஆராய்ந்து தெரிவு செய்ய வேண்டும். வழக்குச் சொற்கள் என்னும் பெயரில் பல அயன்மொழிச் சொற்கள் இடம் பெற்று விடுகின்றன. வழக்கு என்று சொல்வது சரியான வரையறை இல்லாமல் ஆளப்படுகிறது. முறைமன்றம், அலுவலகம் போன்ற இடங்களில் வழக்குச் சொற்களாக இருப்பவை பொதுமக்களிடையே வழக்குச் சொற்களாக இரா. அதேபோல் ஒரு காலத்தில் வழக்குச் சொற்களாக இருப்பவை பிறிதொரு காலத்தில் வழக்குச் சொற்களாக தமிழ்மொழியைப் பொறுத்த வரையில் இடைக்காலத்தில் வரம்பிறந்து வடமொழிச் சொற்களைக் கடன் கொண்டது. ஆனால் சென்ற நூற்றாண்டு முதல் அந்தப்போக்கு முற்றிலும் மாறிவருகிறது. வடமொழிச் சொற்களுக்கு இணையான இயன்மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதே ஊக்கம் பெற்று வருகிறது. ஒரு மொழி பேசும் பொதுமக்களுக்குப் பெரும்பாலும் அம்மொழித் தொடர்பாகச் சிக்கல்கள் மிகுதியாக எழுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆகையால் அம் மொழிபற்றிய புத்தகங்கள் குறிப்பாக அகரமுதலிகள் அவ்வளவாகத் தேவைப்பட மாட்டா. ஆனால் பிற மொழியைக் கற்கும் போது அம்மொழித் தொடர்பாக எழும் சிக்கல்களை அவ்வப்போது அறிந்து கொள்ள அகரமுதலிகள் பெரிதும் துணைபுரிகின்றன. அதே நேரத்தில் இலக்கியம் அமைந்த மொழிகளில் இலக்கியங்களால் ஆளப்பட்ட சொற்களுக்கு உரிய பொருள் பொது மக்களுக்குத் தெரிந்திருக்காது. அவ்வாறான இடங்களில் அகரமுதலிகள் பெரிதும் துணைபுரிகின்றன. இந்த வகையில் அருஞ்சொற் பட்டி என்று புத்தகத்தின் இறுதியில் இடம்பெறுமாறு செய்வது மேலை நாடுகளில் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. 'அகரமுதலிகள் சொற்களின் இரண்டு அடிப்படைத் தன்மைகளைக் கொண்டன வாக இருக்கின்றன. பயன்பாட்டுச் சொற்கள் (function words) மொழியில் பெயர், மாற்றுப் பெயர் என்பன போன்ற இலக்கண அமைப்புடன் இயங்குவது; இரண்டாவது பொருள் சுட்டும் சொற்கள் (referential words) மொழிக்குப் புறம்பாக உள்ள பொருள்களை விளக்குவது”. இவ்விரு வகைகளும் உரியவாறு கையாளப்பட வேண்டும். போதிய அளவு இலக்கணக் குறிப்புகள் தாங்கி இராத அகரமுதலிகள் பெரிதும் குறையுடையனவாகக் கருதப்படுகின்றன. மொழி மதிப்பீடு : ஒரு மொழியைப் பேசுவோர் அனைவரும் மொழியின் செயற்பாட்டை முழுமையாக அறிந்திருப் பார்கள் எனக் கொள்ள இயலாது. பெரும்பான்மை மக்கள் எவ்வாறு; மொழி இயங்குகிறது என்பதை அறியாதவர் களாக இருக்கின்றனர். அதே நேரத்தில் மொழிப் பயன் பாட்டில் இது சரி. இது தவறு என்பதை மக்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். இது மொழி மதிப்பீடு சொற்களில் மட்டும் அடங்கி இராமல் பயன்பாட்டுச் சூழலைப் பொறுத்தும் அமைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. சூழல், காலம், இடம், பண்பாடு போன்ற பண்புகளின் தன்மைக்கேற்ப அமையும். ஆகப்பொருள் தெளிவுக்கு மேற்கோள்கள் தந்து விளக்க வேண்டும். மேற்கோள் உரிய சூழலைக் காட்டி நிற்கும். அதனாலேயே பொருள் தெளிவுக்காக மேற்கோள்களுக்கு முன்னுரிமை தந்து விளக்குகின்றனர். பண்பாட்டு நிலை, செயற்பாட்டு வகை ஆகிய இரண்டில் முதலாவது கல்வித் தன்மைக்கேற்பவும் தனியொருவரின் பண்பட்ட தன்மைக்கேற்பவும் அமையும்.