பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரமுதலிக் கோட்பாடு 21 மேலும் அது தொடர்பான செய்திகளைத் தரமுடியும்; அது கலைக்களஞ்சியம் என்னும் நிலையை எட்டும் நிலை வராத வரை, தமிழ் வளர்ச்சியில் அதன் தொடக்க நிலையி லிருந்து இன்றைய வழக்குவரை அது கொண்டுள்ள பொருள் மாற்றப் படிநிலைகளை முறையாகச் சொல்வதற்கு முயல்கிறது இந்த அகரமுதலி. பொருள் மாற்றம் அல்லது சார்புப் பொருள் வளர்ச்சி கொள்ளல் ஆகியன சில முறையொழுங்கைத் தழுவி வந்துள்ளன. ஒரு சொல் புதியதாக ஒரு பொருளை ஏற்கும் போது சில நேரங்களில் பழைய பொருளை இழந்து விடுகிறது. சொல்லின் பழைய பொருளுக்கும் புதுப்பொருளுக்கும் பெரிய முரண்பாடு ஒன்றும் இராது. இவ்விரு பொருள்களும் வெவ்வேறு சூழல்களில் பயன்படுத்தப் படுவனவாக இருக்கும். பொருள்களின்று மேலும் பல பொருள்கள் வளர்வதுண்டு. பொருள் மாற்றம் அல்லது வளர்ச்சி ஏரண அடிப்படையில் அமைந்திருப்பதைச் சற்றுக் கூர்ந்து நோக்கினால் அறிந்து கொள்ளலாம். எ-டு : புல்லுதல் : துளைத்தல். இவ் வினைச்சொல் வழக்கிறந்தது. புல் = உட்டுளையுள்ள நிலைத்திணை வகை, ஊனுண்ணா விலங்குணவான தாளுள்ள நிலத்திணை வகை, உட்டுளையுள்ள பனை, பனை வடிவான நாள் (அனுடம்), உட்டுளையுள்ள தென்னை, உட்டுளையுள்ள மூங்கில், புற்போன்ற கம்பம் பயிர், புல்லரிசி. (பாவாணர் 1973 : 101.) வேண்டிய தேவை இருக்கிறது. ஒருபொருள் பன்மொழிகள் பல இடங்களில் ஒரு சொல்லுக்குரிய பொருள்களாகக் கொடுக்கப்படுகின்றன. ஒரு சொல்லின் பொருள் முழுமையும் அச்சொற்கு ஒரு பொருள் பன்மொழியாக வரும் சொல்லால் காட்ட இயலாது. ஆகையால் சொல்லுக்கான பொருளை வரையறை மூலம் தருவதே சிறந்தது. பொருள் வரையறை சொல்லின் முழுப்பொருள் தன்மையைத் தருவதாக இருக்க வேண்டும். குன்றக் கூறுதல், மிகையாகக் கூறுதல் ஆகிய இரண்டு குற்றங்களும் பொருள் வரையறையில் இடம் பெறக் கூடாது. பொருள் வரையறை, சொல் சொற்றொடரில் இடம்பெறும் போது தரும் பொருளுக்கு ஒத்து வரவேண்டும். அகரமுதலியில் மேற்கோள் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அகரமுதலித் தொகுப்பாளர் சொல்லைச் சொற்றொடரில் பொருத்திப்பார்த்துப் பொருள் வரையறை தர வேண்டும். சொற்றொடரில் சொல்லைப் பொருத்திப் பார்ப்பது உரிய பொருள் வரையறை செய்வதற்குத் துணைபுரியும். பொருள் வரையறை எளிய சொற்களால் அமைய வேண்டும். பொதுவாகவும் நன்கு ஆட்சி பெற்றதாகவும் உள்ள சொற்களைக் கொண்டு பொருள் வரையறை தருவதே சிறந்தது. இரு மொழி அகரமுதலியில், சொல்லின் ஒருபொருட் பன்மொழி, வரையறை ஆகியவற்றின் மொழி பெயர்ப்பாக இரண்டாம் மொழியில் பொருள் தருகிறோம். ஒருமொழி அகரமுதலியில் ஒருபொருட் பன்மொழிகளைப் பொருள்களாகத் தருவதால் ஏற்படும் குறைபாடு இருமொழி அகரமுதலியில் இரண்டாம் மொழியின் பொருள் தருவதில் இராது. பொருளை உரிய மொழிபெயர்ப்பாகத் தருவது இரு மொழிகளிலும் மொழித்திறனை வளர்ப்பதாக இருக்கும். எளிய சொற்களுக்குக்கூடப் பொருள் தருவதற்கு பெருமுயற்சி எடுக்க வேண்டியதாக இருக்கும். பேச்சு மொழியில் பயன்படுத்தும் சில எளிய சொற்கள் அதிக அளவில் பொருள் விரிவினைக் கொண்டிருக்கும். அச்சொற் பொருள்கள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்றால் பேச்சு மொழியைக் கவனிக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது. பேச்சு மொழியில் பல இடங்களில் சொல் உருவகமாக அல்லது புதியனவாகப் பொருள் விரிவினைக் கொண்டனவாக இருக்கும். பொருள் வரையறை : சொல்லுக்குச் சொல் (word to word) என்னும் அமைப்பில் பொருள் தருவது சிறப்பானதாகக் கருதப்படுவது இல்லை இவ்வகையில் அகரமுதலியைப் பயன்படுத்துவோர்க்குப் பயன்பாடும் மிகக் குறைந்த அளவே இருக்கும் என்கின்றனர். சொல்லுக்குப் பொருள் வரையறை தருவதே சிறப்பானது. வரையறை மூலம் பொருள் தருவது சொல்லைப் பற்றிய முழுச் செய்தியை அறிவதற்கு ஏதுவாக இருக்கும். பொருள் சூழலுக்கேற்ப வளர்ந்த நிலையை அறிய உதவும். மேலும், இதை விளக்கும் வகையில் சொற்றொடரில் பயன்படுத்திக் காட்டுவது சொல்லின் பொருளை முழுமையாக அறிய உதவும். ஒருமொழி அகரமுதலியில் சரியான பொருள் வரையறை தருவதற்குச் சற்று கூடுதல் கவனம் செலுத்த இலக்கணச் செய்திகள் : மொழியின் இரண்டு வகையான சொற்களை அகரமுதலிகள் கொண்டியங்குகின்றன. 1. செயற்பாட்டுச்