பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரமுதலிக் கோட்பாடு 25 அம்மொழிச் சொற்கள் அனைத்தையும் கொண்டிருக்கும். இறந்துபட்ட மொழியில் புதுச்சொல் ஆக்கத்திற்கு இடமிருக்காது. இறந்துபட்ட மொழிகளின் அகரமுதலி அல்லாத பிற மொழி அகரமுதலியில் அம்மொழிச் சொற்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் என்று சொல்லவியலாது. வரையறை : சொல் என்பதைக் குறிப்பிட்ட பொருளுடனும் குறிப்பிட்ட ஒலித் தொகுதியுடனும் குறிப்பிட்ட இலக்கணத் தன்மையில் ஆளப்படுவது என்று TDI வரையறுக்கலாம். சொல்லின் இந்த மூன்று தன்மைகளையும் அகரமுதலி தெளிவாகக் காட்டுவதாக இருக்க வேண்டும். இயன்ற மட்டும் வரையறை சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சொல்லை அடையாளம் கண்டு கொள்ளும் வகையிலும் அதன் இலக்கண வகைமையை {partof speech) அறிந்து கொள்ளும் வகையிலும் பொருள் வரையறை கொடுக்கப்பட்டுள்ளது. மொழி : அடிப்படையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் பிறமொழிச் சொற்களுக்கு இடம் இல்லை. என்றாலும், முதல் சொல் தமிழ்ச் சொல்லாக இருந்து அடுத்து வருவன பிறமொழிச் சொல்லாக அமையும் கூட்டுச்சொல் இவ்வகரமுதலியில் இடம் பெறுவதால், கூட்டுச் சொல்லின் இரண்டாவதாக அல்லது அடுத்தடுத்ததாக அமையும் பிறமொழிச் சொற்கள் அவ்வம் மொழிக் குறியிட்டுக் காட்டப்பெறும். குறிப்பிட்ட சொல்லின் ஆக்கக் காலத்தை அறிவது அச்சொல்லாட்சியின் தேவை, அது உணர்த்தும் பண்பாட்டுக் கூறு, வரலாறு முதலியனவற்றைக் காட்டுவதாக இருக்கும். இது ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படத் தக்கது. குறைந்தது சொல் மொழியில் வழக்குப் பெற்ற நூற்றாண்டுக் காலத்தைக் குறிக்க வேண்டும். பல சொற்களில், போதிய குறிப்புகள் கிடைக்காததால் இவ்வாறு குறிக்க இயலாமல் போகிறது. எவ்வாறு இருந்தாலும் மொழியில் ஒரு சொல் வழக்குப் பெற்ற-பழமையான காலத்தைக் குறிப்பிடுவது- அச்சொல்லைப் பற்றிய செய்திகளை அறிவதற்கு ஏதுவாக இருக்கும். குறிப்புதவி : (reference) சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலியும், சாம்பசிவம் மருத்துவ அகரமுதலியும் அதிக அளவில் குறிப்புதவிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்னர் வந்த அகரமுதலிகளின் சொற்கள் எல்லாம் பெரும்பாலும் சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலியில் இடம் பெற்றுள்ளன. ஆகையால் சென்னைப் பல்கலைகழக அகரமுதலிக்கு முன் வந்த அகரமுதலிகளைக் குறிப்பிடுவது மிகை. அதே நேரத்தில் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி வெளிவந்ததற்குப் பின்னர் வந்த அகரமுதலிகள் பல புதிய உருப்படிகளைக் கொண்டுள்ளன. அவ்வகையில், கிரியா தமிழ் ஆங்கில அகரமுதலி பல புதிய சொற்களையும், நல்ல பொருள் வரையறைகளையும் கொண்டுள்ளது. பெரும்பான்மையான மேற்கோள்கள் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியிலிருந்து எடுக்கப் பட்டுள்ளன. அத்துடன் பல இடங்களில் கூடுதல் மேற்கோள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வழக்கிலிருந்தும் பல இடங்களில் மேற்கோள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உலக வரலாறு : சொற்களின் வரலாறு சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு சொல்லின் காலத்தை அறிந்து கொள்ளலாம். சொல்லின் காலப் பழமை அறிந்து கொள்வது இதன் நோக்கத்துள் ஒன்று. முடிந்தவரையில், பழைமையான இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. இது இவ்வகரமுதலியின் ஒரு குறிப்பிடத்தக்க இன்றியமையாத பணி என்று குறிப்பிடலாம். இவ்வமைப்பைக் கொண்டு ஒரு சொல்லின் ஆக்கக் காலத்தை உறுதி செய்து கொள்ளலாம். ஒரு சொல் எந்தக் காலத்திலிருந்து வழக்கத்திற்கு வந்துள்ளது என்பதைக் குறிப்பது அகரமுதலியின் நோக்கம் அன்று. என்றாலும் ஒரு வேர் : கருத்தடிப்படையில் சொல்லுக்கு வேர் காண்பது பாவாணர் நெறி. அவ்வகையில் அனைத்துச் சொற்களுக்கும் வேர் கொடுக்கப்பட்டிருத்தலே சிறப்பு. ஆனால் பல அடிப்படைச் சொற்களுக்கு வேர் காட்டப் பெறவில்லை. அச்சொற்கள் இயன்மொழிச் சொற்கள் என்பதில் ஐயம் இல்லை. அவற்றுள்ளும் பல சொற்கள் பெயராகவும் வினையாகவும் செயற்படும் பண்பினைக் கொண்டு இயல்புத் தன்மைகளைக் கொண்டவை. இருந்தாலும் அவற்றின் கருத்து வழி ஆக்கத்தைக் காண