பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரமுதலிக் கோட்பாடு 27 (இந்தோ ஐரோப்பிய இனச் சொற்களிடையே காணப்படுவது போல்] திரவிட இனச்சொற்களுக் கிடையே அதிகப்படியான வேற்றுமை காணப்படுவது இல்லை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தினவான சொற்கள் பழந்தமிழ்ச் சொற்கள் எனக் குறிக்கத்தக்கன. கழகக் கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள சொற்களை இவ்வகையினவாகக் கொள்ளுதல் சரியானதாக அமையும். இந்த இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள சொற்களுள் பெரும்பாலானவை இன்றளவும் புழக்கத்தில் உள்ளன. இவ்வாறான சொற்கள் அல்லாமல், இன்றைய புழக்கத்தில் இல்லாமல், பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டும் இடம்பெற்றுள்ள சொற்கள் பால் கவனம் செலுத்தவேண்டியது தேவை. அவற்றை உரியவாறு பதிந்து வைக்கவில்லை என்றால் அவை வழக்கிழந்து போவதற்கும் இடமுண்டு. பழந்தமிழ்ச் சொற்கள் எவ்வகை மாற்றமும் இல்லாமல் இன்றுவரை அப்படியே பயன்படுத்தப்படும் சொற்கள் ஒருவகை. பழந்தமிழ்ச் சொற்கள் திரிந்து வழங்கும் சொற்கள் மற்றொருவகை. கருத்தடிப்படையில் பாவாணர் காட்டும் வேர்கள், அவர் நெறியைக் கடைப்பிடித்துக் காட்டப்பட்டுள்ள வேர்கள் இருக்கின்ற சொற்கள் (இனச் சொற்கள் உள்பட) அனைத்தையும் வைத்து மீட்டுருவாக்கம் செய்யப்பட்டவை எனக் கொள்ளவேண்டும். மேலும் இவ்வகை வேர்கள் வரலாற்றுக் காலத்திற்கு முந்தியவை. சொற்கள் காட்டும் பொருள் மாற்றம் ஒரு மொழி வளர்ச்சியில் அதன் தொடக்கக் கால நிலையிலிருந்து இன்றைய வழக்குவரை ஏற்பட்டுள்ள பொருள் மாற்றத்தின் படிநிலைகளை வரிசைப்படுத்திச் சொல்வது மிகவும் கடினம். பொருள் மாற்றத்தைப் பற்றிச் சொல்வது தேவையற்றது என்றும் சிலர் கருதுகின்றனர். பொருள் மாற்றத்தை, மொழியின் பிறவிடங்களில் காணப்படும் ஒலியன் இலக்கணம் போன்றவற்றின் தன்மையைப் போல் தனியாக ஆராயத் தேவை இல்லை எனக் கருதுகின்றனர். இருந்தாலும் பொருள் மாற்றத்தால் சில முறையொழுங்கைக் காணமுடியும். மாற்றத்தில் பல வகைகளைக் காணமுடியும். மக்கள் மனமே பொருள் மாற்றத்திற்கு அடிப்படையான காரணம். ஆகையால் ஒரு குறிப்பிட்ட சூழலில் பொருள் மாற்றம் எவ்வகையில் மாற்றம் பெறும் என்பதை முன்கூட்டி சொல்ல இயலாது. அதாவது பொருள் மாற்றத்தைப் பற்றி உறுதியான நெறிகள் எதையும் குறிப்பிட இயலாது. ஆனால் பொருள் மாற்றம் ஏற்பட்ட பின்னர் விளக்க இயலும். பொருள் மாற்றத்தினைப் பலவகையாகப் பகுத்துப் பட்டியல் இடமுடியும். அனைத்துப் பொருள் மாற்றங்களையும் 1. பொருள் விரிவு, 2. பொருள் சுருக்கம், 3. மாறி வழங்குவது என்ற மூன்று பிரிவுக்குள் அடக்கலாம். ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் என்னும் வகையில் இருக்கும் சொற்கள் மிகச்சில. இவ்வாறு அமைவது. பொதுவாக அறிவியல், தொழில் நுட்பக் கலைச் சொற்களாக இருக்கும். ஒரு சொல் புதியதாக ஒரு பொருளை ஏற்கும் போது சில நேரங்களில் பழைய பொருளை இழந்துவிடுகிறது. அவ்வகையில் இன்று வழக்கில் உள்ள சொற்களுள் பல தம் பழங்காலப் பொருள்களை இழந்துள்ளன. சில சொற்களின் பழைய பொருள்கள் இலக்கியம் போன்றவற்றில் பதியப் பெற்றனவாக இருக்கின்றன. அழிந்து போன பதிவுபெறாத சொற்களின் பழைய பொருள்களை அறிய இயலாது. இருந்தாலும் ஏரண அடிப்படையில் சில சொற்களை மீட்டுருவாக்கம் செய்வது போல் சொற்கள் உணர்த்தும் பொருள்களையும் மீட்டுருவாக்கம் செய்கின்றனர். ஒரு சொல்லின் பழைய பொருளுக்கும் புதுப் பொருளுக்கும் பெரிய முரண் இருக்காது. பழைய பொருளும் புதுப்பொருளும் ஒவ்வொரு சூழலுக்குப் பொருந்துவனவாக இருப்பதால் குழப்பத்திற்கு அங்கு இடம் இல்லை. இவ்வாறான சூழலில் ஒரு சொல்லின் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட பொருள்களும் வழக்கில் இருக்கும். இப்பொருள்களும் மேலும் பலவாகப் பிரிந்து பல பொருள்களைத் தருவதற்கும் இடமளிக்கும். கொம்பு என்னும் சொல்லுக்கு எருது, ஆடு, எருமை போன்றவற்றின் தலையில் இருக்கும் கூரியதும் நீண்டிருப்பதுமான உறுப்பு என்னும் பொருள் உண்டு. பழம் இலக்கியக் காலத்திலேயே இச்சொல் ஒருவகை இசைக் கருவி என்னும் பொருளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. பிறகு மாழைகளால் செய்த சைக் என்னும் பொருளையும் இச்சொல் ஏற்றுள்ளது. பிறகு இச்சொல் இக்காலத்தே கன்னெய்யில் ஓடும் வண்டி போன்றவற்றில் பொருந்தியிருக்கும் ஒலியெழுப்பும் கருவியையும் குறிக்கிறது. உண்மையில் இவ்வாறான வெவ்வேறு பொருள்களை அச்சொல் கொண்டிருப்பதால் குழப்பம்