பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழறாடு வாய்மையே வெல்லும் மு. கருணாநிதி முதலமைச்சர் தலைமைச் செயலகம் சென்னை - 600009 நாள் 20.9...2007 அணிந்துரை தமிழ்நாட்டில் கழக ஆட்சி அமையும் ஒவ்வொரு முறையும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ் ஆட்சிமொழி செயலாக்கத்திற்குமான பல திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயற்படுத்தி, அந்தச் செயற்பாடுகளைத் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பயன்படுமாறு செய்துள்ளோம்; தமிழ் வளர்ச்சிக்காகத் தனி அமைச்சகத்தை உருவாக்கினோம்; துறைகள் பல கண்டோம்; தம் வாழ்நாள் முழுதும் பாடுபட்ட, தமிழ்ச் சான்றோர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் விருதுகள் அளித்தும், விழாக்கள் எடுத்தும், மணிமண்டபங்கள் அமைத்தும், அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்தம் மரபுரிமையருக்குப் பரிவுத் தொகைகள் வழங்கியும் வந்துள்ளோம். தமிழ்மொழி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள துறைகளுள் "செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்” குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மொழி வளர்ச்சியில் வேர்ச்சொல் அகராதி வெளியிடும் பணி மகத்தானது. உலகில் வெகுசில மொழிகளே வேர்ச்சொல் அகராதிகளைக் கொண்டுள்ளன. அந்த வரிசையில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியை வெளியிட்டுத் தமிழன்னைக்கு அணி செய்யும் நோக்கில் கடந்த 1974ஆம் ஆண்டில் 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்' என்னும் இத்துறையைத் தோற்றுவித்ததுடன், மறைந்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களை அத்துறையின் முதல் இயக்குநராக நியமனம் செய்ததையும் இவ்வேளையில் நான் மகிழ்வுடன் நினைவுகூர்கிறேன். அன்னாரது வழிகாட்டுதல்படி இவ்வியக்ககம் இதுவரையிலும் 24 பகுதிகளை நூல்களாக வெளியிட்டுள்ளது. செம்மொழி எனும் சீர்பெற்றுள்ள தமிழில் வழங்கும் அனைத்துச் சொற்களின் மூலங்களும், வேர்களும் சொந்தத் தமிழிலேயே எவ்வாறு தோன்றி வளர்ந்துள்ளன என்பதை ஆராய்ந்து, சொற்பிறப்பியலை நிறுவுவது என்பது ஒரு நுட்பமான பணியாகும். அப்பெரும்பணியை மேற்கொண்டு, தம் வாழ்நாள் முழுவதும் அதிலேயே ஊன்றிச்