பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏராளமான செயல்பட்டவர் நம் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள். அவர், தமிழே திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்; வடமொழிக்கும் அதுதான் மூலம் என்று தெளிந்து கூறியவர்; உரிய சான்றுகளுடன் அதனை நிறுவியவர். புதியபுதிய துறைகள் தோன்றுந்தொறும், புதிய சொற்கள் தோன்றுதற்கும், வழங்கும் சொற்களில் புதியபல பொருள்கள் இணைந்து விரிவடைவதற்குமான சூழ்நிலையில் அகரமுதலி மிகவும் இன்றியமையாத நூலாகிறது. அதன்பொருட்டு, 19ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழில் புதிய புதிய அகரமுதலிகள் தோன்றியவண்ணம் உள்ளன. அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக, ஆனால், அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்து, வழங்கும் தமிழ்ச் சொற்களுக்கெல்லாம் வேரையும், மூலத்தையும் கண்டறிந்து, அவற்றின் பிறப்பியலைக் கூறும் நூல், "செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி". இதுவரை தோன்றிய அகரமுதலிகளையெல்லாம் பட்டியலிட்டு, அவற்றின் வளர்ச்சி வரலாற்றை அவை தமிழுக்கு நல்கிய பெருமையை எடுத்துரைக்கும் வகையில், "தமிழ் அகரமுதலி வரலாறு" என்ற தலைப்பில், சொற்பிறப்பியல் பேரகரமுதலி வெளியீடுகள் வரிசையில், 'ம', 'ய', 'வ' மடலங்களின் 6 பகுதிகளைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு பகுதி வெளிவருவதைக் கண்டு பெருமிதம் அடைகிறேன். இந்நூலினை உருவாக்கிய அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் அனைத்துப் பணியாளர்களையும் பாராட்டுகிறேன்; எஞ்சிய பகுதிகளையும் விரைவில் வெளிக்கொணர்ந்து தமிழ் வளர்க்கும் திருப்பணியில் அவர்கள் மேலும் மேலும் ஈடுபட்டுப் புகழும் பெருமையும், எய்திட உளமார வாழ்த்துகிறேன். drinummi Jones (மு. கருணாநிதி)