பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 12, PART 1, சொற்பிறப்பு நெறிமுறைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி முதலமைச்சர் VEMENT வாய்ை தலைமைச் செயலகம் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் சென்னை - 600 002 நாள் 18.02.2011. VOLG Qoide அணிந்துரை மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களை இயக்குநராகக் கொண்டு, செம்மொழியாம் தமிழ்மொழியின் தனித்தன்மையையும், தொன்மையையும், மேன்மையையும் புலப்படுத்தும் நோக்கில் 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி' ஒன்றை உருவாக்கும் திட்டத்தை, 8.5.1974 அன்று நான் முதல்முறை முதலமைச்சராக விளங்கிய காலத்தில் உருவாக்கினேன். தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி மட்டுமன்றி, உலகத் தாய்மொழி என்னும் முடிவை உலகு ஒப்பிடுமாறு, பற்பல சான்றுகள் தந்து நிறுவிடும் தொண்டினில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, தமது வாழ்நாள் பணியாகச் செய்துவந்த பாவாணரே, இந்த அரிய பணியை நிறைவேற்ற வல்லவர் என்பது நாடறிந்த உண்மை . அவர்கள் பணியிடையில், 16.1.1981 அன்று இயற்கை எய்த நேரிட்டது பேரிழப்பாகும். எனினும், அப்பணியைப் பாவாணர் ஆய்வு நெறியில் தோய்ந்து தேர்ந்த முனைவர் இரா. மதிவாணன் பொறுப்பேற்றுத் தொடர்ந்து பணியாற்றி, அகர முதலியின் மடலங்களை அச்சியற்றி வெளியிட்டு, அதன் இறுதி மடலமாகிய பன்னிரெண்டாம் மடலத்தினை, திட்டத்தின் 31வது வெளியீடாகக் கொண்டு வந்துள்ளது காண மகிழ்கின்றேன். நமது தமிழ்மொழி 'செம்மொழி' என்பதை மைய அரசு ஏற்று அறிவித்து, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் கோவையில் சிறப்பாக நடைபெற்று, உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் ஒருங்குறி (Unicode) பயன்படுத்தக்கூடிய நிலை உருவாகியுள்ள நல்லதொரு சூழலில், தமிழ் ஆர்வலர்களும், ஆய்வாளர்களும், ஆசிரியர்களும், எழுத்தாளர்களும், கலைத்துறையினரும் இடம்பெற்றுள்ள நாடுகளிலெல்லாம், செம்மொழித் தமிழுக்கு ஒருபெரும் வரவேற்பு மலர்ந்து வருவதை நாம் காண்கிறோம். இந்நிலையில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி திட்டப் பணி நிறைவெய்தியுள்ளது மிகவும் வரவேற்கப்படுவதாகும். இத்திட்டத்தில் பங்கேற்று, பலநிலைகளில் பணியாற்றி திட்டம் முழுமை பெறத் துணை புரிந்துள்ள அனைவருக்கும் எனது பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். மு.கருணாநிதி)