பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவகுண்டம் தேவசிகிச்சை கோயிற் பணிகளைப் பார்த்து வரும் குடிகள்; people who live in the temple land and do temple service. [தேவர் + குடிமை) தேவகுண்ட ம் teva-gundam, பெ. (n.) தானாயுண்டான ஊற்று (யாழ். அக.); natural spring, as God - made (செ.அக.). [தேவர் + குண்டம் தேவகுமாரன் teva-kumaran, பெ. (n.) இயேசு; Christ, as the son of God. [தேவர் + குமாரன்) தேவகுரு' teva-guru, பெ. (n.) வியாழன் (பிங்.); Brhaspati, as priest of the celestials. (தேவர் + குரு) தேவகுரு' teva-guru, பெ. (n.) தேவகுருவம் பார்க்க ; see tiva-guruvam. தேவகுருவம் téva-guruvam, பெ. (n.) விளை நிலங்கள் ஆறனுள் ஒன்று (பிங்); a region of bliss where the fruits of good karma are enjoyed one of six poka-pimi. (தேவர் + குருவம் கேவகுலம் teva-kalam, பெ, (n.) கோயில்; temple. "தேவகுலமுந் தெற்றியும் பள்ளியும்" (மணிமே. 26:72) [தேவர் + குலம்) தேவகெந்தம் teva-kentam, பெ. (n.) தேவகந்தம் (யாழ். அக.) பார்க்க ; see teva-kantam [தேவகத்தம் – தேவகெந்தம்) தேவகோட்டம்' teva-kottam, பெ. (n.) தேவகுலம் பார்க்க; see teva-kulan. "தேவகுலம் மன்றாகச் செய்யப்பட்ட தேவ கோட்டத்தை” (திருக்கோ . 19 [தேவர் + கோட்டம்) தேவகோட்டம் teva-kottam, பெ. (n.) கோயில் கருவறைப் புறச்சுவரில் இறைத்திரு மேனிகளை வைப்பதற்கான மாடங்கள்; niche in the outside of the temple sanctum to keep the iodls. [தேவர் + கோட்டம் தேவகோடி teva-kodi, பெ. (n.) ஒரு பேரெண்; a very large number. "தேவகோடி கார்மலி கடலங் காலாள்" (சீவக. 2219) (தேவர்) + கோடி) தேவச்சந்தம் teva-c-candam, பெ. (n.) நூறு சரமுள்ள முத்தாரம் (யாழ். அக.); a garland of hundred strings of pearls (செ-அக.). [தேவர் + சந்தம்) தேவசங்கு teva-saigu, பெ. (n.) சங்கப் பணம்; a treasure of Gubera. (தேவ + சங்கு) தேவசத்துவம் teva-sattuvam, பெ. (n.) மகளிர்க்குரிய மெய்ப்பாடுகள் பத்தனுள் தேவத் தொடர்பான குணம் (கொக்கோ); the divinc element in the make up of a woman, one of pattu cattuvam. [தேவர் + சத்துவம்) தேவசபை teva-sabai, பெ. (n.) இந்திரன் அவை ; Indiran's audience-hall. [தேவர்) + சபை] தேவசமுகம் teva-samugam, பெ. (n.) தேவசன்னிதி பார்க்க; sce tdva-Sannidi. (தேவார்) + சமூகம் தேவசன்னிதானம் teva-sannidiyam, பெ. (n.) தேவசன்னிதி பார்க்க; see teva-sannidi. (தேவர் + சன்னிதானம்) தேவசன்னிதி teva-Sannidi, பெ. (n.) 1. தெய்வத்தின் திருமுன்பு; divine presence. 2. கோயில்; temple, [தேவர் + சன்னிதி தேவசாட்சியாய் téva-satciyay, கு.வி.எ. (adv.) உண்மையாய்; tnly, as having God forwitness. [தெய்வம் – தேவம் + சாட்சியாய் தேவசிகிச்சை teva-sigiccai, பெ. (n.) மூன்று மருத்துவ முறைகளுள், இதளிய கந்தக நஞ்சுகளால் நோய்கட்குச் செய்யும் நீக்கலினை (பரிகாரம்) (பதார்த்த, 1202); treatment of diseases by the use of mercury,