பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவமூடம் தேவர்கோ தேவமூடம் teva-midam, பெ. (n.) தேவர்கள் தம்மைக் காப்பாற்றுவார் என்று மயங்கல்; believing Gods will protect, an illusionary idea. [தேவ + மூடம். முட்டு – முட்டாள். முட்டு- முட்டன் – மூடன், மூடன் – மூடம் தேவமேரையாய் teva-meraiyay, வி.எ. (adv.) அழகாக, நன்றாக; divinely. (தேவ + மேரை + ஆய் தேவயஞ்ஞ ம் teva-yainam, பெ. (n.) கடவுள் Cadira; sacrifice to deity. (தேவார்) + யஞ்ளும் Skt. yajia – த, யஞ்ஞ ம் தேவயாத்திரை tevayattirai, பெ. (n.) நற்பேறு கிடைக்க செய்யும் பயணம்; pilgrimage to sacred placcs. “தேவயாத்திரை தீர்த்தயாத்திரை செய் சிவநேசர்" (தணிகைப்பு. அகத்திய, 502 2. கோயில் தெய்வத்தின் புறப்பாடு; procession of the chief idol of a temple. ம. தேபயாத்ர [தேவார்) + யாத்திரை தேவயானம்' tevayanam, பெ. (n.) 1. கடவுளர் ஊர்தி ; chariot or vehicle of a God.2. அர்ச்சில் முதலிய தேவதைகளைக் கடந்து வீடு பேறடையச் செல்லும் வழி; way to the supreme heaven which is open only to the brahma-vit, and on which one has to pass by arccis and other deities. ம. தேவபானம் (தேவர்) + யானம்) தேவயானம்' tevayagam, பெ. (n.) மூக்கின் வழியாய் வலது பக்கத்தில் ஓடும் மூச்சு; air passing through the right nostril (சா-அக.), தேவயானை tevayanai, பெ. (n.) 1. ஐராவதம் பார்க்க; see aiaivadam. 2. தெய்வயானை ;a wife of Lord Murugan. [தேவ + யானை] தேவயுகம் tevayugam, பெ. {n.) 12000 தெய்வ வாண்டு கொண்ட காலவளவு (சங்அக.); period consisting of 12000 divine years. ம. தேவயுகம் [தேவ + யுகம் தேவர் tevar, பெ. (n.)1. கடவுளர்; deities, objects of worship. "தேவர்ப் பராஅய முன்னிலைக் எண்ணே ' (தொல்பொருள், 450.2. உயர்ந்தோரைக் குறிக்குஞ் சொல்; a term of respect for persons, of high slation. 3. திருவள்ளுவர்;Tiruvalluvar. “ஒன்னா ரழுத கண்ணீரு மனைத்து என்றார் தேவரும்" (சீவக. 1891, உரை) 4. சீவகசிந்தாமணி என்னும் பாவியத்தின் ஆசிரியரும், 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான திருத்தக்கத் தேவர் என்னும் சமண முனிவர்;Tiruttakka-ttevar, the Jaina author of Sivaga-cintainani. “தேவர் அதனை அபரகாத்திர மென்றார்" (சீவக 805, உரை). 5. அரசர், துறவியர் முதலியோரது, பெயர்ப்பின் வழங்கும் சிறப்புப் பெயர்; a word appended to the names of kings, ascctics, etc. "இராசராசதேவர், திருத்தக்கதேவர்", 6. தேவரீர் பார்க்க ; see tevarir, “தேவர் திருவடிகளிலே" (ஈடு, 2,3,4). 7. மறவர் சாதியினரின் பட்டப்பெயர்; title of marava caste. 8. நால்வகைத் தேவதை வகையார்; celestial of four classes. [தேவ(ம்) – தேவர்] தேவர்க்காடல் tevar-k-kadal, பெ. (n.) தெய்வமேறி ஆடுதல் (ஆவேசம்) (வின்.); temporary possession by a spirit. [தேவர்க்கு + ஆடல்) தேவர்கடன் tevar-kadan, பெ. (n.) தெய்வ வேள்வி பார்க்க ; see teyva-velvi (சா.அக.), [தேவர் + கடன் தேவர்கன்மி tevar-kanmi, பெ. (n.) தேவகன்மி பார்க்க; see teva-kanmi."திருவானிலை மாதேவர் கோயிலில் தேவர் கன்மிக்கும்" (தெக தொ. 3:43) (தேவர் + கன்மி) தேவர்குலம் tevar-kulam, பெ. (n.) தேவகுலம் பார்க்க; see teva-kulam. “தேவர் குலத்தை வலங்கொண்டு” (இறை. ! பாயி பக்.3) (தேவர் + குலம் தேவர்கோ tevarkd, பெ. (n.) தேவர்கோன் பார்க்க; sce tevarkon. "தேவர் கோ வறியாத தேவதேவன்” (திருவாச. 5, 30, (தேவர் + கோ